நாள்: 03-12-2022
எசாயா 41 : 10 ” பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன். திகைக்க வேண்டாம், நான் உன் கடவுள்.”
தானியேல் 3 : 8 – 17 சாத்ராக் , மேஷாக், மற்றும் ஆபேத்நேகா ஆகியவர்கள் இஸ்ரவேலின் ஒரே உண்மையுள்ள கர்த்தரை பின்பற்றுபவர்களாகவும் ஆராதிப்பவர்களாகவும் இருந்தனர்.
பொய்க்கடவுள்களையும் , நெபுகாத் நேச்சார் அரசனின் பொன் சிலையையும் வணங்கும்படி அவர்களிடம் கேட்டபோது அவர்கள் மறுத்து அக்கினிச் சூளையில் தள்ளப்பட்டனர்.
அவர்கள் சர்வவல்லமையுள்ள கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்படிவதையும் அவரை பின்பற்றுவதையும் தேர்ந்தெடுத்தனர்.
யாத்ராகமம் 20 : 2 – 17 மற்றும்
உபாகமம் 5 : 6 – 21 ல் ” என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உங்களுக்கு இருக்கக் கூடாது என்றும் விக்கிரகங்களை உருவாக்காதே என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
அவர்கள் இந்த உலகில் மனிதனால் செய்யப்பட்ட விக்கிரகங்களை செய்வதற்குப் பதிலாக சரியான வழியாகிய உயிருள்ள கர்த்தரை ஆராதிப்பதை தேர்ந்தெடுத்தனர். ஏனென்றால் மனிதர்களைவிட கர்த்தராகிய தேவனை பிரியப்படுத்துவது மிக முக்கியமானது என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள்.
எல்லா மனிதர்களும் பொருட்களை , பாரம்பரியங்களை, சடங்குகளை ,உருவாக்குமுன்பே முன்பே கர்த்தரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
எசாயா 54 : 17 ” உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போம்”
ரோமர் 8 : 31 ” தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? “
சங்கீதம் 60 : 11 – 12 ” இக்கட்டில் எங்களுக்கு உதவி செய்யும் . மனுஷனுடைய உதவி விருதா.தேவனாலே பராக்கிரமம் செய்வோம், அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப் போடுவார். “
நாம் முழு இருதயத்தோடு கர்த்தரை நம்பும் போது நாம் நமது சுயபுத்தியில் சாயாமல் இருப்போம் . நம்முடைய எல்லா வழிகளிலும் அவரை ஏற்றுக்கொண்டால் அவர் நம் பாதைகளை செம்மைப்படுத்துவார்.
கர்த்தர் தம்முடைய தூதரை அனுப்பி சாத்ராக் , மேஷாக் மற்றும் ஆபேத்நேகா ஆகியோரைக்காப்பாற்றினார். அவர்கள் அக்கினிச் சூளையிலும் பாதுகாப்பாக இருந்தனர். அவர்களது தலையின் ஒரு முடிகூட கருகவில்லை. ராஜாவான நெபுகத்நேச்சர் இதைக் கண்டு தாழ்மையடைந்து கர்த்தரை மகிமைப்படுத்தினார். மேலும் அவருடைய ராஜ்யத்தில் மிகப்பெரிய மரியாதையும் உயர்ந்த பதவியும் கொடுத்தார்.
நாம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும்போது , அவர் நம்மை விடுவித்து , நம்மை பாதுகாத்து நம் எதிரிகள் முன்பாக நம்மை மேன்மையாக்குவார்.
சங்கீதம் 23 : 4 – 5 “நான் இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்கு பயப்படேன். தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் தடியும் என்னைத் தேற்றும். என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி , என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. “
சங்கீதம் 91 :14 – 16 ” அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன். என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். அவன் என்னை நோக்கி கூப்பிடுவான். நான் அவனுக்கு மறு உத்தரவு அருளிச் செய்வேன். ஆபத்தில் நானே அவனோடிருந்து அவனைத் தப்புவித்து அவனைக்கனப்படுத்துவேன். நீடித்த நாட்களில் அவனைத் திருப்தியாக்கி என் இரட்சிப்பை அவனுக்கு காண்பிப்பேன். ” ஆமென்.
Sol. ரும்னாபிரமாணிக்
