நாள்: 04-12-2022
மனிதகுலத்திற்கு தனது கட்டளைகளை கவனமாக ஒப்படைப்பதற்குரிய கர்த்தரின் கடினமான முயற்சிகள்.
யாத்ராகமம் 20 : 3 – 7 ” என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம். மேலே வானத்திலும் , கீழே பூமியிலும் , பூமியின் கீழ் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து , என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்து பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். என்னிடத்தில் அன்பு கூர்ந்து , என் கற்பனைகளை கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறவராயிருக்கிறேன். உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.”
கர்த்தர் தம் கட்டளைகளை தன் விரல்களால் எழுதி கற்பலகைகளின் மீது ( ஆதலால் யாராலும் அழிக்க முடியாதபடி) பொறித்து உறுதி செய்ய முயன்றார். எனவே மனிதன் உண்மையிலும் ஆவியிலும் அவருடைய கட்டளைகளை பின்பற்றி கீழ்படிகிறார்கள் .
யோசுவா 1 : 7 - 9 " என் தாசனாகிய மோசே உனக்கு கற்பித்த நியாயப்பிரமாணத்தின் படியெல்லாம் செய்ய கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு . நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்து கொள்ளும்படிக்கு அதைவிட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டு பிரியாதிருப்பதாக . இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்ய கவனமாயிருக்கும்படி இரவும் பகலும் அதை தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப் பண்ணுவாய். அப்பொழுது புத்திமானாயும் நடந்து கொள்ளுவாய். நான் உனக்கு கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே . நீ போகுமிடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். “
இன்னும் கர்த்தரால் மனிதர்களை இதைப் பின்பற்றும்படி செய்ய முடியவில்லை. அவர்கள் தங்கள் பாவ வழிகளிலே தொடர்ந்தனர். நித்திய அழிவிலிருந்து மனிதனைக் காப்பாற்ற கர்த்தர் தமது முயற்சிகளைத் தொடர்ந்தார்.
கர்த்தருடைய கட்டளைகள் மனிதனுடைய எண்ணங்களில் விதைக்கப்பட்பட்டு அவர்களின் இருதயங்களில் சேமிக்கப்பட வேண்டும். ஆனால் மனிதகுலம் இன்னும் கீழ்படியாமையை தேர்ந்தெடுத்து பாவத்திலே தொடர்ந்தது.
கர்த்தர் இன்னும் தம்முடைய காணாமல் போன ஆட்டினை தேடிக் கொண்டிருக்கிறார். இறுதியில் அவருடைய ஒரே மகனை அனுப்பத் திட்டமிடுகிறார்.
யோவான் 3 : 16 சொல்கிறது . ” தேவன் , தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு , அவரைத் தந்தருளி , இவ்வளவாய் உலகத்தை அன்பு கூர்ந்தார். “
கர்த்தர் தன்னுடைய ஒரே மகனை, இந்த உலகத்தை கண்டிப்பதற்காக அனுப்பவில்லை. மாறாக அவர் வழியாக இந்த உலகத்தை இரட்சிப்பதற்காகவே வந்தார்.
ரோமர் 10 : 9 – 10
“கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினால் அறிக்கையிட்டு , கர்த்தர் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவசித்தால் இரட்சிக்கப்படுவாய். நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும் , இரட்சிப்பு ண்டாக வாயினாலே அறிக்கை பண்ணப்படும்.”
எனவே நாம் நேரம் கிடைக்கும்போது பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்புக் கோருவோம். இரட்சகரிடமிருந்து இரக்கம் பெறுவோம். நம் தேசத்திலுள்ள ஒவ்வொரு உயிருள்ள ஆத்துமாவையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Sol. ஜாஸ்மின் ஜேம்ஸ்.
