நாள் 20-07-2022
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
–ஏசாயா 9:6.

கர்த்தத்துவத்தை தன் தோள் மீது சுமந்து கர்த்தருக்கு மட்டுமே உரித்தான பெயர்களால் அழைக்கப்படும் வருங்காலக் குழந்தையைப் பற்றிய தீர்க்கதரிசனம் இது. இயேசுவைப் பற்றிய பிரசித்தமான பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களில் ஒன்று.
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார் – கிறிஸ்து வந்ததன் நோக்கம் நமக்காகத்தான். இது மேசியாவின் மனித நேயத்தை காட்டுகிறது.
ஒரு மனிதனாக குழந்தை வடிவில் அவர் வரவேண்டி இருந்தது, அப்போதுதான் மனிதர்கள் சந்திக்கும் எல்லா சோதனைகளை அவரும் சந்தித்தபிறகும் பரிசுத்தமாக இருக்க முடியும்.
எபி 4:15 சொல்லுகிறது நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்.
நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார் – அனாதி காலமாக கர்த்தர் நமக்கு கொடுக்க திட்டமிட்டது அவருடைய குமாரனாகிய இயேசுவைத்தான், இயேசு அவருடைய குமாரனாகிய நித்தியமாக இருந்தார். ‘மகன்’ எனக்கூடிய வார்த்தை பிதா, குமாரன் இருவருக்கும் இடையில் இருக்கும் உறவை வெளிப்படுத்துகிறது. மூவொடு தேவனில் குமாரனாக அவர் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் இருக்கிறார்.
பிலி 2:6-7 – அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பாவத்தையும் சாவையும் வெல்லுவதற்காக அவர் பிதாவின் குமாரனாக, மனித உடலில் வந்தார்.
மத் 14:33 – அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்து கொண்டார்கள்.
மத் 16:16 – சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.
“தோள்கள்” – அவருடைய தலைமைத்துவத்தை உறுதிபடுத்துகிறது.
அவர் இயேசு ராஜாவாக ஆட்சி செய்வார், உலகத்தின் ராஜாவாக.
இவ்வுலகத்தின் முழு அரசாட்சியும் அவருடைய தோளின் மேல் உள்ளது. கிறிஸ்துவால் ஆதரிக்கப்பட்டு, கர்த்தருடைய தெய்வீக யோசனையால் நிறுவப்பட்டிருந்தால் அது நிரந்தரமானதாக்வும், முழுமையானாரசாங்கமாகவும் இருக்கும். வெற்றி என்பது தனி மனிதனை பொறுத்தோ அல்லது கட்சியைப் பொறுத்தோ இல்லை. இந்த வசனத்தின்படி எதிர்காலத்தில் எல்லா அரசாங்கங்கள் மற்றும் ராஜ்யங்கள் மீது ஆட்சி செய்வார் என்பதை காட்டுகிறது. தானியேல் 2:44 சொல்லுகிறது, அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; சக 14:9 – அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். இந்த அரசில் குழப்பம் இருக்காது, ஏனென்றால் கிறிஸ்து சிறந்த ஆலோசகர். ராஜாதி ராஜாவாகிய இயேசு கிறிஸ்து அவருடைய ஆலோசனை குழுவை வைப்பார். அவர் கர்த்தர், உண்மையின் ஊற்று. அவர் ஆட்சி செய்யும் போது அவரே எல்லாமுமாய் இருப்பார், அரசியில் குழப்பங்கள் ஏதும் வராது. வேதம் சொல்லுகிறது, 1கொரி 14:33 – தேவன் கலகத்திற்கு தேவனாயிராமல், சமாதானத்திற்கு தேவனாயிருக்கிறார்; அவர் அனைத்தையும் முறைப்படி செய்யும் தேவன். அவரிடம் தங்களை ஒப்புகொடுக்கும் குழப்பமான வாழ்க்கையை அவர் ஒழுங்கமைக்கிறார். அவருக்கு செய்ய முடியாதது என்று ஒன்றுமே இல்லை. அவருடைய ராஜ்யத்தில் முரண்பாடுகள் இல்லை. அவருடைய கிருபையை ஏற்றுக்கொள்ளும் அனைவருக்கும் கர்த்தரிடமிருந்து அமைதியை கொடுக்கிறார். (ரோம 1:7).
ஜெபம்
அன்பின் பரலோக பிதாவே பரலோகத்தில் உம்முடைய ராஜ்யம் இருப்பதுபோல இந்த பூமியிலும் வருவதற்காகவும், உம்முடைய ராஜ்யம் எல்லா ராஜ்யங்கள் மற்றும் அரசாங்கங்கள் மீது இருப்பதற்காகவும் நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம்.
ஆமேன்.
SR.ANGELICA, AOJ

