நாள்: 08-06-2022
புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே.
கலா 3:1.

அப்போஸ்தலர் பவுல் கலாத்தியர்களிடம் உங்கள் நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்கி மேலும் வேதத்திற்கு முரணான பொய்களால் நீங்கள் ஏமாற்றப்பட்டீர்கள் என்று சொன்னார். மேலும் அவர்களிடம், ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா?. மனதில் இருக்கும் அரணால் வரும் பலன்கள் இவைகளே.
மக்கள் சில நேரங்களில் அசுத்த ஆவியினால் அல்ல தங்களுடைய சொந்த அரண்களாலே பிரச்சனைக்குள்ளாகிறார்கள். நம்முடைய கடந்த கால வாழ்க்கையில் நடந்த சில பாவங்களை குற்றச்சாட்டுகளாக நம்மீது வைத்து நம்மை சோர்வடைய செய்கிறான். நம்முடைய விசுவாச வாழ்க்கையை நாசமடைய செய்கிறான். மக்கள் தங்களுடைய பழைய சடங்கு சம்பரதாயங்களில் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்,
எபி 10:5,6,7.
நாம் உன்னதமான நம்பிக்கையில் இருக்கிறோம். நம்முடை பாவங்களை மன்னிக்க தன்னையே தந்து நம்மை அவருடைய சொந்த ஜனங்களாக்கிய நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து மகிமையோடு மேகத்திலிருந்து இறங்கி வருவார்.
தன்னுடைய கிரியைகளால் நம்மை பரிசுத்தமாக்கமுடியும் என்னும் பொய்யில் யாரும் மாட்டிக்கொள்ள வேண்டாம். ஏனென்றால் வேதம் சொல்லுகிறது, நம்முடைய நல்ல காரியங்கள் அழுக்கு துணிபோல.
நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது.
ஏசா 64:6.
அவரே நம்முடைய முதன்மையான ஆசாரியர், பரலோகத்தில் நமக்காக பரிந்துபேசுபவர்..
நாம் இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டுள்ளோம்.தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும்.
எபே 5:26
சாட்சி
நாங்கள் கிற்ஸ்துவை ஏற்றுக்கொண்ட பின்னரும் ஒரு சாதாரண விசுவாசிகளாகவே இருந்தோம். எங்களுடைய தாத்தா ஒரு ஆசாரியராக இருந்தார். சுட்டெறிக்கும் வெயிலிலும் நற்செய்தியை அறிவிக்க கிராமங்களுக்குச் சென்றுவிடுவார். நாங்களும் இயேசுவிடம் எங்கள் வாழ்க்கையை ஒப்புகொடுத்து நீரினால் ஞானஸ்ஞானம் பெற்றோம்.
ஜெபம்
பிதாவே, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தை எங்களுடை பாவங்களை கழுவ கொடுத்ததற்காக நன்றி. நித்திய ஜீவனில் பங்காளர்களாக எங்களை தேர்ந்துகொண்டதற்காக உமக்கு நன்றி.
ஆமேன்.
Sol .Noreen
