நாள் :07-06-2022
நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள்.
1 பேது 2:3.

நம்முடைய உடலுக்கு உணாவு இல்லாமல் இருக்கும்போது பசிக்கு ஆளாகிறது எனவே உபவாசம் இருக்க நமக்கு நிறைய பொறுமை தேவைப்படுகிறது. சரீர பிரகாரமாக உபவாசம் இருப்பது, சரீர இச்சைகளை கொல்லத்தான் மேலும் சரீரத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும்தான். தன்னுடைய ஊழியத்தை இவ்வுலகில் துவங்குவதற்கு முன்பாக இயேசு கிறிஸ்து 40 இரவும் பகலும் உபவாசம் இருந்தார். மத் 4:1-17). தானியேல், மோசே, எஸ்தர், தாவீது போன்ற பலர் வேதத்தில் உபவாசம் இருப்பதை நாம் காண்கிறோம்.
ஒரு ஆன்மீக மனிதனுக்கு வேறொரு வகையான உபவாசம் மிகவும் ஆபத்தானது. அது ஆன்மீக உபவாசம் என்று சொல்லலாம். சீடர்களுக்கு ஜெபிக்க சொல்லி கொடுக்கும் போது, சரீர உணவிற்கு அப்பாற்பட்டு ஆன்மீக உணவைப் பற்றி குறிப்பிடுகிறார். பழைய ஏற்பாட்டில் தேவன் மக்களை மன்னாவால் போஷித்தார். இன்றும் கூட தேவன் தன்னுடைய வார்த்தையினால் நம்மை போஷிக்கிறார்.

ஒரு மனிதன் சரீரம் ஆவி மற்றும் ஆத்துமாவினால் உண்டாக்கப்பட்டிருக்கிறான். நம்முடைய உடலுக்கு உணவு தேவைப்படுவதைப் போல நம்முடைய ஆன்மாவிற்கும் கர்த்தருடைய வார்த்தை மற்றும் அவருடைய கறிபனைகள் என்னும் உணவால் திருப்தி படுத்த வேண்டும். இவ்வுலக மனிதன் நல்ல உணவு உண்டு மகிழ்ச்சி அடைவது போல ஆன்மீக மனிதன் ஆன்மீக உணவினால் திருப்தி அடைகிறான்.
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங் 34:8.
கர்த்தருடைய உண்மையான மனிதன் விரும்புவது என்ன வென்றால் கர்த்தருடைய வேத வார்த்தையால், தியானத்தால், ஜெபத்தால், மற்றும் ஆராதனையால் நிறப்பப்பட வேண்டும் என்பது தான். இயேசு தன்னை உண்மையாக பின்பற்றுபவர்களுக்காக இவ்வாறு ஜெபிக்கிறார்.
யோவா 17:9-11
நான் அவர்களுக்காக வேண்டிகொள்கிறேன், உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல் நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன்…..
நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன்.
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது….
சங் 34:15
அதனால்தான் மலை பிரசங்கத்தில் இயேசு தெளிவாக சொல்லுகிறார், நீதியின் நிமித்தம் பசி தாகம் உள்ளவர்கள் பாக்கிய்வான்கள் அவர்கள் திருப்திஅடைவார்கள்.
சாட்சி
நான் இல்லத்தரசியாக இருக்கிறேன். வீட்டில் உள்ள அனைத்துவேலைகளையும் தவறாமல் செய்துவருகிறேன். நான் கர்த்தருடைய வேதத்திற்கு அதிக பசியாய் இருக்கிறேன். வேத வாசிப்பு, வெளிப்பாடுகளை எழுதுதல், பிறருக்காக ஜெபித்தல், கர்த்தருடைய ஊழியத்தை செய்வது எனக்கு மேன்மையாக இருக்கிறது. பரிசுத்த ஆவியானவர் என்னை அவருடைய வழிநடத்துதலால் இன்னும் மேலே கொண்டுசெல்வார்.
ஜெபம்
பரலோக பிதாவே, நித்திய வாழ்வின் மீது எங்கள் கவனம் என்றும் இருப்பதாக, எங்களுடைய உலக கடமைகளை செய்யும் போது உம்முடைய பிரசன்னத்தால் எங்களை நிறப்பும், உம்முடைய கட்டளைகளுக்கு கீழ்படிய எங்களுக்கு உதவிசெய்யும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே,,
ஆமேன்.
Sol. Neelam
