தானியேல் – II

நாள்:13-05-2022 –  தேவ செய்தி

அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

லூக் 18:14

ஜெபத்தைப் பற்றி பேசும் போது கர்த்தரை நாம் அணுகுவதற்கு சரியான மனநிலை என்ன என்பதை இயேசு கிறிஸ்து இந்த உவமையின் மூலம் எடுத்துச் சொல்கிறார். ஆலய்த்திற்கு ஜெபிக்கச் சென்ற இரண்டு மனிதர்களைப் பற்றி அவர் பேசினார். அவர்களில் ஒருவன் பரிசேயன் மற்றொருவன் ஆயகாரன்.

பரிசேயன் அங்கே நின்றுகொண்டு தான் எப்படிப்பட்ட நீதிமான் என்று தன்னைத்தானே உயர்த்தி ஜெபித்தான். ஆனால் அந்த ஆயகாரன் தன் மார்பிலே அடித்துக்கொண்டு தான் ஒரு பாவி என்று ஏற்றுக்கொண்டான் அதற்காக கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டான்.

பரிசேயனுடைய ஜெபத்தில் என்ன தவறு இருந்தது, பரிசேயனுடைய ஜெபத்தில் எது சரியாக இருந்தது. இவர்கள் இருவரைப் பற்றிய கர்த்தரின் மதிப்பீடு நமது எதிர்பார்ப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டுமா? இதை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினம் இல்லை.

பரிசேயன் தன்னுடைய ஜெபத்தை எப்படி துவங்குகிறான் என்று பார்ப்போம், “கர்த்தாவே இந்த ஆயகாரனைப் போல நான் இல்லாததால் நான் உம்மை ஸ்தோத்தரிக்கிறேன்.”

நீங்கள் ஒரு மருத்துவரை சந்திக்கச் செல்லுகிறீர்கள், அவரிடம் நீங்கள் இவ்வாறு சொல்லுகிறீர்கள், நான் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறேன், எனக்கு மருந்து தேவை இல்லை. உங்களுடைய காத்திருப்பு அறையில் இருக்கும் நோயாளிகளைப் போல நான் இல்லை. என்னிடம் எந்த குறையும் இல்லை.

மருத்துவர் அவனை செக்கப் செய்து பார்க்க கூட அவன் அனுமதிக்க வில்லை. இப்படிப்பட்டவனோடு மருத்துவர் என்ன செய்வார்? இந்த மனிதனில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது, அவனுடைய வியாதி கண்டுபிடிக்கப்படாது, ஏனென்றால் அவனுக்கு எதுவுமே தேவை இல்லை. மருத்துவரை அவன் அனுமதித்திருந்தால் அவனுக்கு இருக்கும் வியாதி என்ன என்பதை அவர் கண்டறிந்து அதற்கு மருந்து கொடுத்திருப்பார்.

இதைத்தான் வேறு இடத்தில் இயேசு சொல்லுகிறார்,, “ பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.” மத் 9:12. இந்த வசனத்திற்கு பொருத்தமான எடுத்துக்காட்டு இந்த பரிசேயன். தேவாலயத்தில் தான் நீதிமான் என்றும் தன்னுடைய ஆன்மீக மற்றும் தார்மீக தன்மையை நியாயப்படுத்தவே வந்தான். அவன் ஜெபிக்க வரவே இல்லை..

ஏன் இந்த பரிசேயன் இப்படி ஜெபிக்கிறான் என்பது ஆயக்காரனுக்கு நன்றாகவே தெரியும். தன்னை அசிங்கப்படுத்தவே. பரிசேயன் உரத்த குரலில் சொன்னான், “பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.லூக் 18:11,

ஆயக்காரன் பதிலுக்கு ஒன்றுமே சொல்ல வில்லை. அவன் தனது ஆத்துமாவின் நோயை அறிந்திருந்தான். அவன் யாரையும் வெறுக்க வில்லை, தனது தேவையைப் பற்றி மட்டுமே நினைத்து தன் மார்பை அடித்துக்கொள்கிறான், அவனை துன்புறுத்திய அந்த நோயானது வெடித்து வெளியே வந்தது.

தேவனே பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும் என்றான். தான் மட்டும் தான் இந்த உலகிலேயே இருக்க கூடிய ஒரே பாவி என்று தன்னை நினைத்தான். ஆனாலும் இயேசு சொல்லுகிறார் இப்படிப்பட்ட  ஜெபத்தைத்தான் கர்த்தர் கேட்கிறார்.

பெருமையும் மன நிறைவோடும் தங்களுடைய வார்த்தை ஜாலத்தால் தைரியமாக ஜெபிப்பவர்கள், எப்படி கர்த்தருடைய தேவாலயத்திற்குள் வந்தார்களோ அப்படியே திரும்பி செல்வார்கள்.

ஜெபம்

உமக்கு முன்பாக எப்போதும் எங்களை தாழ்த்த எங்களுக்கு கிருபை தாரும். எங்களை உம்மிடம் ஒப்புகொடுக்கிறோம். ஆமேன்.

Sol.Gerard

தானியேல் – II

நாள் 12-05-2022- தேவ செய்தி

அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான். கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார்.

2நாளா 30:18-20

தன்னுடைய ஆளுகையின் போது எசேக்கியா ராஜா பல நாட்களாக பழுதடைந்திருந்த கர்த்தருடைய தேவாலயத்தை புதுப்பித்தான். கர்த்தருக்கான ஊழியத்தை தொடர்ந்தான். அவன் ஆசாரியர்களுக்கு சொன்னதாவது.

என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள்கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான்.

2 நாளா 29:11.

ஆனாலும் அநேக ஜனங்கள் தங்களைச் சுத்தம் பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள். ராஜா எசேக்கியா இஸ்ரேல் மற்றும் யுதேயாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினான், எருசேலேமிலிருக்கும் கர்த்தருடைய தேவாலத்திற்கு அனைவரும் வந்து பஸ்காவை அனுசரிக்க வேண்டும் என்று எழுதி அனுப்பினான்.

ராஜாவும் அவருடைய பிரபுக்களும் எருசலேமில் உள்ள மொத்த சபையும் இரண்டாம் மாதத்தில் பஸ்காவை கொண்டாட முடிவு செய்தனர், ஆனால் போதிய ஆசாரியர்கள் தங்களை அர்ப்பணிக்காததாலும், மக்கள் இன்னும் கூடிவராததாலும் அவர்களால் அதைக் கொண்டாட முடியவில்லை.

எனவே ராஜா மீண்டும் ஒரு கடிதத்தை மக்களுக்கு அனுப்பி வைத்தான்.

நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்த தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர்கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள்.

இப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள்.

2 நாளா 30:9-10.

எசேக்கிய சோர்ந்து போகவில்லை. தங்களை பரிசுத்தம் பண்ணாதவர்களுக்காக கர்த்தரிடம் ஜெபித்தான், மேலும் கர்த்தர் அவர்களை மன்னித்தார். ராஜாவினுடைய பிரார்த்தனையை கர்த்தர் கேட்டு மக்களை சுகமாக்கினார்.

யூதா மற்றும் இஸ்ரவேல் இந்த இரண்டு ராஜ்யங்களையும் ஒன்றிணைத்து கர்த்தருடைய சந்நிதிக்குக் கொண்டுவர ராஜா எசேக்கியா ஏவ்வளவு பொறுமையாக இருந்திருப்பார்.

இந்தியாவில் உள்ள அனைத்து சபைகளையும் கர்த்தரிடம் கொண்டுவந்து தூய்மைப்படுத்துவது மிகப்பெரிய முயற்சியாகும்.  துரோகம், கேலி அவமானங்கள் போன்றவற்றை நீங்கள் அனுபவிக்க வேண்டியிருக்கும் ஆனால் நல்ல முடிவுகளை கொண்டுவர விடா முயற்சி தேவை.

யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று.

2நாளா 30:12.

கர்த்தருடைய கிருபை இந்திய சபையின் மீது இப்பொழுது இருக்கிறது. நாம் ஒருமனம் உள்ள இருதயாத்தோடு நாம் உழைக்க வேண்டும். கர்த்தருடைய சித்தத்திற்கு தங்களை ஒப்புகொடுக்காதவர்களுக்காக நாம் ஜெபிப்போம். நாம் ஜெபிக்கும் போது கர்த்தர் நம் நாட்டையும் , நம் மக்களையும் சுகப்படுத்துவார்.

நமக்கு தேவையானது குணப்படுத்துதல்.

கடந்தகாலத்தின் வலிமிகுந்த நினைவுகளிலிருந்து குணமாக வேண்டும்.

நீண்ட காலமாக நம் நினைவில் இருக்கும் காயங்களில் இருந்து குணமாக வேண்டும்.

ஆத்துமா, ஆவி மற்றும் சரீரம் குணமாக வேண்டும்.

உடல் உணர்வு மற்றும் ஆன்மீக காயங்களிலி இருந்து நாம் குணமடைய வேண்டும்.

குற்ற உணர்வு, அவமானம் மற்றும் நாம் வெறுக்கப்பட்டதால் ஏற்பட்ட காயங்களிலிருந்து குணமாக வேண்டும்.

நம்முடைய தேசமும் குணமடைய வேண்டும். அதுவும் வியாதிப்பட்டிருக்கிறது.

நம்முடைய பொருளாதாரம் நோயுற்றுள்ளது.

நம்முடைய தொழில்களும் நலிவடைந்துள்ளன.

நம்முடைய மக்கள் நோயுற்று இருக்கிறார்கள்.

இளைஞர்கள், குழந்தைகள்ள், முதியவர்கள் தங்களுடைய ஆவி ஆத்துமா மற்றும் சரீரத்தில் நோயுற்றிருக்கிறார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக நம்முடைய சபைகள் நோயுற்றுள்ளன.

சாட்சி

ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி மும்பையில் நடந்த கூடுகையில்   சபையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று முடிவு செய்த அன்றே தேவன் அதிசயத்தை நடத்தினார். இரண்டு சபைகளின் தலைவர்கள் தங்களுடைய விசுவாசிகளை பயிற்சிக்கு அனுப்புகிறோம் என்று எங்களுக்கு போன் செய்தனர். நம்முடைய தேசத்திற்கு அதன் மக்களுக்கும் முழுமையான ஆரோக்கியத்தையும் சுகத்தையும் தேவன் தர வேண்டும் என்று தீர்க்கதரிசனம் உரைப்போம். இன்று 24 மணி நேரமும் உங்கள் நாவு இதை உச்சரித்துக்கொண்டே இருக்கட்டும். இன்றே இதற்கான பலனை நாம் காண்போம்.

Sr. Angelica AOJ

.

தானியேல் – II

நாள்:11-05-2022 – தேவ செய்தி

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்.

த் 7:7

இந்த வசனம் ஜெபத்தில் விடாமுயற்சியுடன் நாம் ஜெபிக்க வேண்டும் என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. ஆன்மீக ஆசீர்வாதங்கள் மற்றும் அன்றாட தேவைகளுக்காக தேவனுடைய பிள்ளைகள் கர்த்தரிடம் கேட்க வேண்டும். ஒரு முதலாளியிடம் கேட்பதை போல அல்ல ஒரு தகப்பனிடம் குழந்தை கேட்பதை போல கேட்க வேண்டும்.

இந்த உலகில் இருக்கும் நம்முடைய தகப்பன் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பல்வேறு தடைகள் உள்ளன. ஆனால் நம்முடைய தேவன் நாம் நினைப்பதற்கு வேண்டுவதற்கும், அதிகமாய் செய்ய வல்லவராய் இருக்கின்றர். தைரியமாகவும், விசுவாசத்தோடும், நன்றியோடும், சிறிதும் சந்தேகம் இல்லாமல் நாம் அவரை கேட்க வேண்டும்.

நம்முடைய தேவைக்காக கேட்க வேண்டும், அவருடைய விவேகத்தை நாட வேண்டும், சந்தர்ப்பங்களை தேட வேண்டும். நன்றியோடு, அவருடைய வார்த்தையின் படி, அவருடைய சித்தத்திற்கு ஏற்றவாறு அவரை நாம் கேட்க வேண்டும். இயேசுவின் நாமத்தினால் நாம் கேட்க வேண்டும். நாம் அவருடைய மகிமைக்காக உழைக்கும் போது பிதா நம்மில் மகிழ்ச்சி அடைகிறார்.

நாம் விடாமுயற்சியுடன் கேட்க வேண்டும் தட்ட வேண்டும். தம்மை நேசிப்பவர்களுக்கு பரிபூரணமான மற்றும் நல்லதைக் கொடுக்க தேவன் தயாராக இருக்கிறார். கண்கள் காணாததையும், காதுகள் கேட்காததையும் நம் எண்ணங்களில் தோன்றாததையும் அவர் நமக்கு கொடுக்க வல்லவராய் இருக்கிறார்.

ழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காதுகேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை;

ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

1கொரி 2:9

நாம் கேட்காததினால் நம்மிடம் இல்லை. அல்பாவும் ஒமேகாவும், துவக்கமும் முடிவும் ஆன தேவன் அனைத்தையும் அறிந்தவர். நமக்கு என்ன தேவை என அவருக்கு தெரியும். நாம் அவரிடம் கேட்க வேண்டும்.

மத் 7:11

 நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.

யாகோ 4:2-3.

சாட்சி

ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டு காலை ஆராதனையில் நான் முதன்முதலாக பங்கேற்றேன். ஒவ்வொரு நாளும் இந்த காலை ஆராதனையில் பங்கேற்க ஆவலாய் இருக்கிறேன். மற்ற சகோதர சகோதரிகளுடன் கலந்துரையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அருமையான காலை ஆராதனை, ஆராதனை பாடல்கள், விண்ணப்ப ஜெபம் மற்றும் தேவ செய்தி என அனைத்துமே என்னுடைய மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது.

ஜெபம்

அன்பின் பரலோக பிதாவே, தைரியமாக கேட்கவும், தேடவும் கதவை தட்டவும், விசுவாசத்தோடும் நன்றிநிறை உள்ளத்தோடும் சந்தேகம் இல்லாமல் எங்களுடைய தேவைகளுக்காக உம்மிடம் கேட்டு பெற்றுக்கொள்ள எங்களுக்கு கிருபை தாரும்.

ஆமேன்.

Sol.Anju