நாள் : 27-04-2022 – தேவ செய்தி
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.
– 1தெச 5:17

சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
–லூக் 18:1
அநியாயமான நீதிபதியை தன் எதிராக எதிராக நியாயம் கேட்க விடப்பிடியகச் சென்ற விதவையின் உவமையை நாம் நன்கு அறிந்திருக்கிறோம். அவளுக்கு உதவி செய்ய யாருமே இல்லை. ஆனால் தொடர்ச்சியாக அவள் சென்று தன் கோரிக்கையை சளைக்காமல் நீதிபதி முன் வைத்தாள். அவளுடைய விடாமுயற்சியால்தான் நீதிபதி அவளுடைய வழக்கை தீர்த்துதந்தார். ஜெபத்தின் மூலம் பரலோக பிதாவுடன் தொடர்ந்து உறவாடுவதன் மதிப்பை தம்முடைய சீடர்களுக்கு உணர்த்தவே இந்த நிகழ்வை இயேசு உவமையாக கூறுகிறார். தன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கூக்குரலை கேட்க அவர் காதுகள் தயாராக இருக்கின்றன. அவருடைய உதவி நமக்கு தேவையா இல்லையா என்பது நம்முடைய தேர்வு.
தானியேல் ஒரு நாளைக்கு மூன்று வேளை தவறாமல் ஜெபித்தான். தானியேல் பாபிலோனில் இருந்தபோது, கர்த்தருடைய இரக்கத்தின் மீது அவனுடைய கண்கள் நிலைத்திருந்தது மேலும் அவருடைய நகரமாகிய எருசலேமின் திசையை நோக்கி அவனுடைய ஜன்னல்கள் திறந்திருந்தன. கர்த்தர் அவனுடைய ஜெபத்தை எப்படி புறக்கணிப்பார்.
கர்த்தர் தன்னுடைய தூதர்களை அனுப்பி தானியேலை காயப்படுத்தாதபடி சிங்கங்களின் வாய்களை கட்டிப்போட்டார். தானியல் கர்த்தருடைய குணங்களை அறிந்திருந்தார் எனவே தன்னுடைய மக்களுக்காகவும், அவர்களுடைய விடுதலைக்காகவும் திறப்பில் நின்று ஜெபித்தார். தனது சொந்த பாவத்தையும், தனது முன்னோர்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு உபவாசத்துடன் ஜெபித்து விண்ணப்பங்கள் செய்து, 21 நாட்கள் வழக்கம் போல் சாக்கு உடை மற்றும் சாம்பலை பூசி தன்னை தாழ்த்தினார். நாம் வேதத்தில் படிப்பது போல ஜெபத்திற்கு பதிலை கபிரியேல் மூலம் தேவன் அனுப்பினார்.
ஆகவே எல்லா மனிதர்களுக்காகவும், அரசர்களுக்காகவும், அதிகாரத்தில் உள்ள அனைவருக்காகவும் விண்ணப்பங்கள், பிரார்த்தனைகள் பரிந்து பேசுதல்கள் மற்றும் நன்றி செலுத்துதல் அகியவை செய்யப்பட வேண்டும் என்று நான் அறிவுறுத்துகிறேன்.
1திமோ 2:1-2
திமோத்தேயுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் அப்போஸ்தலன் அரசர்கள், ஆட்சியாளார்கள் மற்றும் அதிகாரத்தில் உள்ள அனைவருக்காகவும் தொடர்ந்து ஜெபிக்குமாறும் மக்கள் நல்ல மற்றும் அமைதியான வாழ்க்கைக்கு உதவும் வகையில் அரசாங்க புத்திசாலியான தீர்மானங்களை எடுப்பார்கள். தலைவர்கள் மக்கள் நலனுக்கான தங்கள் கடமையில் திறமையாகவும் நேர்மையாகவும் இருக்க நாம் ஜெபிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்.
–எசேக் 22:30
திறப்பில் நின்று தேசத்திற்காக ஜெபிக்க ஆள் இல்லை என்று எசேக்கியலுடன் தேவன் சொல்லுகிறார்.
நம்முடைய தேசத்திற்காகவும், ஆட்சியாளர்களுக்காகவும் மக்களுடைய நலனுக்காகவும் ஜெபிப்பது நம்முடைய கடமை அல்லவா?
அநேக நேரங்களில் இஸ்ரவேலர்கள் வணங்கா கழுத்துள்ளவர்களாகவும், கர்த்தருக்கு எதிராக கலகம் செய்தார்கள் இதனால் தேவன் அவர்களிடம் கோபமாக இருந்தார். அநேக தருணங்களில் இஸ்ரவேலர்களுடைய நன்றிகெட்ட தனத்திற்கு, கர்த்தருடைய கோபம் அவர்கள் மேல் வராமல் இருக்க மோசே திறப்பில் நின்று ஜெபித்தான்.
நாம் இடைவிடாமல் ஜெபிப்போம். நம்மீதும் நமது தேசத்தின் மீதும் அவருடைய கருணையை காட்ட சர்வவல்லமை உள்ள தேவனக்கு முன்பாக தலை வணங்குவோம். அவருடைய நன்மைகளுக்காக நாம் அவரை ஆசீர்வதிப்போம்.
–Sol. Dr. Salomi Kurien
