நாள்-24-04-2022 – தேவ செய்தி
இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்;
அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான்.
எஸ்றா 7:6

எஸ்றா ஒரு வேதபாரகனாயிருந்தன், அவன் பாபிலோனுக்கு கைதியாக பிடித்துக் கொண்டுச் செல்லப்பட்டான்.
மோசே மூலம் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தை எழுதுவதற்கு ஆவலாகவும், தயாராகவும் இருந்தான். கர்த்தர் எழுதக்கூடிய ஒரு பேனாவாக அவன் நாவு இருந்தது,
மேலும் அவனுடைய பேச்சும் எழுத்தும் அபிஷேகம் செய்யப்பட்டிருந்தது. கர்த்தர் ஒரு செய்தியை சொல்லும்போது அதை சுவற்றிலும் கற்பலகையிலும் அவன் எழுதி வைத்தான்.
யாத் 31:18
எஸ்றா ஞானத்திலும், வளர்த்தியிலும் வளர வழி தேடினார். அப்படிப்பட்ட மக்களை கர்த்தர் வழிநடத்துவார் மேலும் அவர்கள ஆசீர்வதிப்பார். அவர்களுடைய செல்வாக்கை பெருக்கச் செய்வார்.
தானியேல் 5:5-12
எஸ்றா மற்றும் நெகேமியா இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்கள் மேலும் அவர்கள் செல்வாக்கு மிக்க யூதர்களாக இருந்தார்கள்.
எருசலேமுக்கு திரும்பி அதை மீண்டும் கட்ட வேண்டும் என்ற ஆசை அனலாக எரிந்துகொண்டிருந்தது. எருசலேமை மீண்டும் கட்ட தேவையான பொருட்களையும், அதற்கான அனுமதியையும் பெறுவதில் வெற்றிப்பெற்றனர்.
–எஸ்றா 7:10
சொல்லுகிறது கர்த்தருக்கு நன்றி சொல்லவும் அவரை துதிக்கவும் எஸ்றா தனது மற்றும் மக்கள் இருதயத்தை தயார் செய்தான். அவன் கர்த்தருடைய வார்த்தையை வாசிக்க ஆரம்பித்தவுடன் மக்கள் மனம் நொந்து அழ ஆரம்பித்தனர். எஸ்றா அவர்களை ஆறுதல்படுத்தினான், அவர்களை மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்தான். நம்முடைய துக்கம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும் கர்த்தருடைய வேதத்தை நாம் வாசித்து, தியானம் செய்து, மனப்பாடம் செய்யும் போது அது நம்மை சந்தோஷமாக வைத்திருக்கும்.
கர்த்தருடைய ஏதாவது ஒரு வாக்குறுதியின் மீது நம்பிக்கை வைப்பது மேலும் அதை தனதாக்கி கொள்வதும் கூட கீழ்படிதல்தான்.
எஸ்றாவைப் போல நாமும் கர்த்தருடைய வசனத்தைப் படித்து நேரம் கிடைக்கும் போது அதை அவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம். இந்த சிறிய காரியத்தில் நாம் உணமையுள்ளவர்களாக இருந்தால் கர்த்தர் நம்முடைய பார்வையையும், செல்வாக்கையும் விரிவுபடுத்துவார்.
கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.
–சங் 115:14
வேதத்தை தினம்தோரும் படிக்க வேண்டும், அதை தினமும் வியாக்கியானம் செய்ய வேண்டும், தினமும் மற்றவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். வேதத்தை படிப்பவர்கள் அதை அன்றாட வாழ்வில் பயன்படுத்தாமல், வெறும்படிப்பவராகவே இருக்க இயலாது. வாக்குறுதியின் தேசத்திற்கு (பைபிளின் வாக்குறுதிகள்) மக்களை அழைத்துச் செல்ல வேண்டும்.
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.
–தானியேல் 12:3
நாம் வேதத்தை அதிகமாக படிப்பதாலும், தியானம் செய்வதாலும், மனப்பாடம் செய்வதாலும், மேலும் அதை பின்பற்றுவதாலும் நாம் ஆசீர்வதிக்கப் படுவோம், அதையே நம்முடைய வாழ்க்கையாக மாறிவிடும்.
எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய இதயத்திற்கு எடுத்துச் செல்லும்போது கர்த்தர் நம்மை அதிகமாக ஆசீர்வதிக்கிறார் மேலும் நாமும் உண்மையான சமாதானத்தை அனுபவிக்கிறோம். எழுதுவது என்பது நம்முடைய எண்ணங்களுக்கு பார்க்க கூடிய வார்த்தையில் மாற்றுகிறோம். வார்த்தைகள் காணப்படாததை நமக்கு காட்டுகிறது.
நாம் கர்த்தருக்காக எழுதும்போது அவருடைய கையில் எப்போதும் தயாராக இருக்கும் ஒரு பேனாவாக மாறுவோம்.
ஜெபம்
பரலோக பிதாவே, உம்முடைய கையில் தயாராக இருக்கும் ஒரு பேனாவாக எங்களை மாற்றும். எங்களுடைய எண்ணங்களையும், செல்வாக்கையும் அதிகபடுத்தும். இயேசுவின் இனிய நாமத்தில் கேட்கிறேன் பிதாவே. ஆமேன்.
–Sol.Gigi Jacob
