நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.
1யோவா 1:9.

நாம் தொடர்ந்து கர்த்தருடைய ஐக்கியத்தில் இருக்க வேண்டுமென்றால் நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும். கர்த்தர் தன்னுடைய வாக்குறுதியில் மாறாதவர் எனவே நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பும் சுத்திகரிப்பும் நிச்சயம் உண்டு. மேலும் கர்த்தர் தன்னுடைய நீதியின்படியே கிரியை செய்கிறார். சிலுவையில் இயேசுவின் இறப்பு கர்த்தரின் நீதியை முழுமையாக்கி இருக்கிறது மற்றும் குற்றமனப்பான்மையிலிருந்து நம்மை விடுவித்திருக்கிறது.
- நம்முடைய இருதயத்தை ஆறாய்ந்து அறிய கர்த்தருக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். சங் 51:10 தாவீது சொல்லுவது போல, “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.”
- கர்த்தரோடு நாம் நேரத்தை செலவிட வேண்டும். நம்முடைய ஆதாரமாக இயேசு மற்றும் கர்த்தருடைய வசனம் இருக்க வேண்டும். அதனால்தான் பவுல் சொல்லுகிறார் 1தெச 5:17 – “இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள்.”
கர்த்தருடைய வசனத்தை தினமும் தியானியுங்கள். நமக்கு என்ன வெளிப்படுத்த விரும்புகிறார் எனவும், நம்மை எப்படி மாற்ற விரும்புகிறார் எனவும் அவரை கேளுங்கள். நம்முடைய எந்த பாவத்தையும் அவர் நமக்கு உணர்த்தினால் உடனே பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு கேளுங்கள், பாவத்தின் மீது வெற்றி கொள்ளுங்கள். நம்முடைய அநேக குற்றங்கள் நமக்கு இயேசு சுட்டிகாட்டினால், பயப்படத்தேவையில்லை. உடனே மன்னிப்பு கேட்ப்போம். அவர் நமக்கு உதவுவார். ஏசா 1:18 – உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.
கிறிஸ்துவைப் போல நாம் மாறுவது ஒரு தொடர்ச்சியான செயல் முறையாகும். இது உடனே ஏற்படாது. கர்த்தருடைய வெளிப்பாடு இல்லாமல் நாம் மாறமுடியாது. அவர் நமது கண்கள், காதுகள் மற்றும் மனதை திறக்க வேண்டும்,
எரே 17:9,10 – எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.
ஜெபம்
பிதாவாகிய தேவனே உம்மோடு எப்போதும் ஐக்கியத்தில் இருக்க எங்களுக்கு உதவி செய்யும். எங்களுடைய பாவங்களை மன்னித்து, இருதயங்களை சுத்தமாக்கும். ஆமேன்.
Sol. Sujatha Maduram
