
ம த் தே யு 2 1 : 1 -10
அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி: உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். வசனம் 5 – சகரியாவி தீர்க்கதரிசனத்தின் நிறைவு. சக9:9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.
மத் 21:2-3 – இல் சீடர்களிடம் பேசிய இயேசு இப்போது நம்மிடம் பேசுகிறார்.
இயேசு தனது இரண்டு சீடர்களை அனுப்புகிறார். அதேப்போல தேவன் நம்மையும் அனுப்ப விரும்புகிறார். எங்கு செல்ல? இயேசு மற்றும் அவருடைய ராஜ்யத்திற்கும் எதிராக இருப்பவர்கள் மத்தியிலே நம்மை அனுப்ப விரும்புகிறார். சிறை பட்டவர்களுக்கு விடுதலை அளிக்கவும், பிணியாள்ர்களை சுகமாக்கவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் அவர் நம்மை அனுப்புகிறார். இங்கு இயேசு சொல்லுகிறார், ஒரு கழுதையும் அதன் குட்டியும் கட்டப்பட்டிருப்பதை காண்பீர்கள்.
யாராலும் விரும்பப்படாத உன்னை எனக்காக தெரிந்துகொண்டேன். அவர் உன்னுடைய வாழ்க்கையை முழுமையாக்க விரும்புகிறார்.
யாத் 13:13, மோசேவின் பிரமாணத்தின்படி, முதற்பேரான அனைவரும் கர்த்தருக்கு சொந்தம். முதல் கழுதை குட்டியின் கழுத்து முறிக்கப்பட வேண்டும் ஏனென்றால் அது சிறைப்பட்டிருக்கிறது. நம் வாழ்வில் இயேசு வந்தப்பின் நாம் மாறிவிடுவோம்
கழுதை கர்த்தருடைய வசனத்தின் அதிகாரத்தை காட்டுகிறது. நாம் வேதத்தை சார்ந்திருக்க வேண்டும்.
தன்னுடைய கண்களுக்கு கவர்ச்சியானதையே மனிதன் தேர்ந்தெடுக்கிறான். ஆனால் கர்த்தர் தெரியாததை தேர்ந்தெடுத்து இருதயத்திற்கு நல்லதாக மாற்றுகிறார்.
கழுதையைப் போல நம்மையும் தேவன் பயன்படுத்துவதே போதும் என்று இருக்க வேண்டும், உலகெங்கும் நற்செய்தியை சுமந்து செல்பவர்களாக நாம் இருக்க வேண்டும். அதற்கான எந்த பரிசையும் எதிர்பார்க்க கூடாது, கழுதையின் மீது அமர்ந்த இயேசுவின் பிரசன்னமே போதுமான பரிசு, மற்றும் ஆசீர்வாதம், எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது, அவருடைய சித்தத்தை நிறைவேற்ற கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கழுதைகள் நாம். நம்முடைய வேலைக்காக நமக்கு புகழை சம்பாதிக்க கூடாது, நம்மை பயன்படுத்துவதற்காக நன்றி சொல்லுவோம். அவருடைய கிருபை மட்டுமே போதும் என்று இருப்போம்,
ஜெபம் கர்த்தாவே நான் உம்மை ஸ்தோத்தரிக்கின்றேன், சிறைப்பட்டிருந்த எங்களை நீர் விடுதலையாக்கினீர். எங்களைப் போலவே சிறைப்பட்டிருக்கும் அநேக மக்களை விடுதலைச் செய்ய எங்களை அனுப்பும். ஆமேன்.
SOL.ALOYSIUS,AOJ
