உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால்
போதிக்கப்பட்டிருப்பார்கள்;
உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்.
ஏசா 54:13.

நீதி 22:6 - பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.
ஏசா 48:17-19 –
இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர்சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர்நானே.
கர்த்தருடைய பிள்ளைகள் அவர் சொல்வதைக் கேட்டிருந்தால், அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். அழிவுக்கு தேவை இருந்திருக்காது.
2001, ஜனவரி 15 ஆம் தேதி கர்த்தர் எனக்கு ஒரு குடும்பத்தை கொடுத்தார். மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் என கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார். என்னுடைய மூன்றாவது மகன் லோகம் யோசுவா, விடுதியில் தங்கி எட்டாம் வகுப்பை அக்டோபர் 2019 ஆண்டு படித்துவந்தான். தீய நண்பர்களோடு பழகியதால் தீய காரியங்களை செய்ய ஆரம்பித்தான். என்னுடைய வேலைதளத்திலும் எனக்கு பிரச்சனைகள் எழும்பின. எபி 1:13 – மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா? இந்த வசனம் என்னை திடப்படுத்தியது.
மார்ச் முதல்வாரத்தில் சகோதரி ஆஞ்சலிக்கா மறுசீரமைப்பு பற்றி வகுப்பில் பேசினார். அதே வேளையில் என் வாழ்விலும் அநேக மறு சீரமைப்புகள் நடந்தது. அவைகளில் ஒன்று என்னுடைய மகன் லோகம் கெட்ட நண்பர்களின் பிடியிலிருந்து விலகினான். எல்லா மகிமையும் கர்த்தருக்கே. அவர் என் மகன் மீது காட்டிய அன்பு, கருணை மற்றும் கிருபைக்காக நன்றி சொல்லுகிறேன். எரே 33:26 -, அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்றுகர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
இந்த வாக்குதத்தம் என் வாழ்வில் நிறைவேறியது. என் மகன் CBSE 10 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற கடினமாக உழைத்துக்கொண்டிருக்கிறான். எல்லா மகிமையும் பிதா, குமாரன் மற்றும் பரிசுத்த ஆவிக்கே உண்டாகட்டும்.
ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.
மா ற் கு 1 1 : 2 4 .
சங் 37:4 – கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.
விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத்தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.
ஏசா 54:10 – மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிறகர்த்தர் சொல்லுகிறார்.
யோவா 6:45 – எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்.
ஜெபம் அன்பின் பரலோக பிதாவே, நான் இழந்த எல்லாவற்றையும் எனக்கு திருப்பி கொடுத்ததற்காக நன்றி. என்னையும் என்னுடைய குடும்பத்தையும் உம் கரத்தில் ஒப்படைக்கின்றேன். தங்களிடம் இருந்ததை இழந்து தவிக்கும் அநேகர் வாழ்வில் மீண்டும் திரும்ப கிடைப்பதாக, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் பிதாவே. ஆமேன்.
Sol.Sikap,AOJ
