நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது;
அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
சங்க் 119:71.

நாம் தினமும் உபத்திரவத்திற்குட்படுகிறோம், அதற்கான காரணங்கள் வேறுபடலாம்.
- கடமையில் நமது அலட்சியம்
- நமது கவனக்குறைவு
- நமது பலவீனங்கள்
- நமது நோய்கள்
- மற்றவர்கள் உங்கள் மீது பொறாமைப்படுகிறது
- நமது உழைப்புக்குப் போதுமான பலன் கிடைப்பதில்லை
- பிறரை காட்டிகொடுப்பது முதலியன
காரணம் எதுவாக இருந்தாலும் சரி, கர்த்தர் நம்மைப் பற்றியும் நம்முடைய உபத்திரவத்தைப் பற்றியும் கவலைப்படுகிறார். நாம் உபத்திரவப்படும்போது அவரும் துன்பப்படுகிறார்.
ஏசா 52:5 – இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்.
அவருடைய பிள்ளைகள் அவரோடு இருக்கும்வரை அவர் மகிழ்ச்சியடைகிறார். அவருடைய பிள்ளைகள் அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்படும்போது, அவரும் துன்பப்படுகிறார்.
உபத்திரவப்படும்போது, மக்கள் அவரை நோக்கி அழும்போது அவர் அவர்களுடைய அழுகுரலைக் கேட்கிறார், பரத்திலிருந்து வந்து அவர்களை காப்பாற்றுகிறார். அவருடைய பிள்ளைகளை காப்பாற்ற தேவையான எல்லாவற்றையும் அவர் செய்கிறார். அவர்களுடைய சூழலில் ஒரு மாற்றத்தை கொண்டுவருகிறார்.
நம்முடைய வாழ்வில் தேவையான மாற்றங்களை கொண்டுவந்து, நாம் எங்கு தவறு செய்துவிட்டோம் என்பதையும், எங்கு நாம் பாதுகாப்பற்று இருந்தோம் என்பதையும் நமக்கு சுட்டி காட்டுவார்.
ஆன்மீக யுத்தம் செய்யும் பல யுத்திகளை அவர் நமக்குச் சொல்லிதருவார் –
நீ எப்படி யுத்தம் செய்துகொண்டிருக்கிறார், எப்படி வேறுவிதமாகச் யுத்தம் செய்து வெற்றி பெறலாம், எப்படி சில சூழ்நிலைகள் மற்றும் சோதனைகளை இயேசுவோடு நிற்பதன் மூலம் தவிர்த்திருக்கலாம், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலைகளிலிருந்து தப்ப என்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் போன்றவை.பின்னர் உங்களுடைய முழுவாழ்க்கையும் மாறிவிடும். இதனால்தான் சங்கீதகாரன் சொன்னான், நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
நான் தமிழ்நாட்டில் வசித்துக்கொண்டிருப்பதால் நான் தமிழ் மொழியை கற்றேன். தமிழில் சரளமாக பேச கர்த்தர் எனக்கு கிருபை தந்தார். நான் இரட்சிக்கப்பட்டேன், அநேக பயிற்சி கூட்டங்களை தமிழில் நடத்தியிருக்கின்றேன் அதனால் தமிழில் வேதத்தை நன்றாக வாசிக்க கற்றுக்கொண்டேன். ஆங்கில வேத வசனங்கள் எனக்கு அவ்வளவு சரளமாக வராது. ஒரு காலகட்டத்தில் ஆங்கில வேதாகமத்தை பயன்படுத்தும்படி கர்த்தர் எனக்குச் சொன்னார். 3,4 முறை ஆங்கில பைபிளை பயன்படுத்த ஆவியில் உணர்த்தப்பட்டேன். ஆனால் நான் வேண்டும் என்றே இதை நிராகரித்தேன். திடீரென இந்தியா முழுவதும் எஸ்கோல் தேசிய அறுவடை பெருவிழா தரிசனத்தைப் பற்றி பகிர்ந்து கொள்ள நான் சென்றேன். ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது, ஆங்கில வேதாகம வசங்களை பயன்படுத்துவது போன்றவை எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கர்த்தர் கொடுத்த அறிவுறைப்படி நான் கேட்டு, ஆங்கில வேதாகமத்தை பயன்படுத்த தொடங்கியிருந்தால் இந்த பிரச்சனையை ஈசியாக சரிசெய்திருக்கலாம். நான் கர்த்தருக்கு நன்றி சொன்னேனெ மேலும் அவரிடம் அதற்காக மன்னிப்பு கேட்டேன். அவர் பிரச்சனையை தீர்த்து வைத்தார், ஆங்கிலத்தில் சரளமாக பேச உதவினார். இப்போது பரிசுத்த ஆவியின் உந்துதல்களை நான் கவனமாக கேட்கிறேன், அதற்கு கீழ்படிகிறேன். எல்லா மகிமையும் கர்த்தருக்கே உண்டாகட்டும்.
Sr. Angelica AOJ
