நாள் 12-04-2022 – தேவ செய்தி
விசுவாசம் ஒரு ஆன்மீக பரிசு:
ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும் அளிக்கப்படுகிறது.
1கொரி 12:8-9

விசுவாச வரம் ஒரு வல்லமை நிறைந்த பரிசு, அதை தவறாக பயன்படுத்தாதவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. இந்த வரத்தை ஞானத்தோடு பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் அது சந்தேகத்தையும், குழப்பத்தையும் உருவாக்கும். “இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். (மாற்கு 11:22-24).
நம் அனைவருக்கும் அப்படிப்பட்ட ஒரு வரம் கிடைத்திருக்குமேயானால், இவ்வுலகம் என்னவாயிருக்கும்?
நமது விருப்பங்கள் மற்றும் தனிப்பட்ட வசதிக்கு ஏற்ப மலைகள் மற்றும் ஆறுகள் இடங்களை மாற்றத் தொடங்கும், மேலும் கால நிலைகள் மாறுபடும், எனவே இந்த வியத்தகு வரத்தை கர்த்தர் அனைவருக்கும் கொடுக்காததற்கு இதுவே காரணமாகும். வேதத்தில் இந்த வல்லமையான வரம் கொடுக்கப்பட்ட சில நபர்கள் இருக்கின்றார்கள். யோசுவா சூரியனை நிறுத்தச் செய்தார், மேலும் போரில் வென்று முடிக்கும் வரையில் இரவு வரகூடாது என்றார்.
கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குமுன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். –
1இராஜா 17:1.
ராஜாவிடம் இதைப் பேச அவர் தைரியமாக இருந்தார். கர்த்தர் மேல் அவர் நம்பிக்கை வைத்ததுபோலவே நடந்தது. ஆனால் மீண்டும் மழையை கொண்டுவர, தொடர்ந்து தலையை கீழே சாய்த்து ஜெபிக்க வேண்டியிருந்தது. அவர் ஜெபித்ததுபோலவே மழை வந்தது. மோசே செய்த அற்புதங்கள் கர்த்தரால் கட்டளையிடப்பட்டு திட்டமிடப்பட்டன, எனவே அவருக்கு நம்பிக்கையிருந்தது என்ன நடக்கப்போகிறது என்பதை அறிவிக்க.
கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.
சங் 33:6
விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
எபி 11:3
கர்த்தருடைய வார்த்தை நம்மில் நிலைத்திருந்தால் நமக்கு தேவையான யாதொன்றைக் கேட்டாலும் அதை அவர் நமக்கு தருவார். இப்படிப்பட்ட விசுவாசத்தால்தான் சுகமாக்குதல் உண்டாகிறது. நம்பாமல் அவரில் விசுவாசம் வைத்தால் அது பேரிழப்பை கொண்டுவரும்.
எனவே அவரில் நாம் முழு நம்பிக்கை வைப்போம், அவர் எது செய்தாலும் நமது நன்மைக்கே என்று விசுவசிப்போம். மலைகளை நகர்த்தகூடிய விசுவாசத்தைப் பற்றி பவுல் பேசுகிறார். நாம் பெற்றுக்கொண்டோம் என்று விசுவசிக்க வேண்டும்.
அப்போஸ்தலர் நடபடிக்கையில், அப்போஸ்தலர்களுக்கு மத்தியில் கூட இப்படிப்பட்ட விசுவாசத்தை பார்க்கிறோம். இன்றுகூட இது நடக்கும்.
இயேசு சொன்னது போல அந்த தெய்வீக அதிகாரமும், வரமும் நமக்கு இருக்க வேண்டும், விவேகத்துடன் அதை பயன்படுத்த கர்த்தர் நமக்கு ஞானத்தை தருவார். கர்த்தரில் விசுவாசம் வைப்போம். இந்த விசுவாசம் நமக்கு அவருடைய கிருபையால் கொடுக்கப் பட்டுள்ளது.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
-Sol.Salomi
