எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
(லூக் 21:20).
எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். (லூக் 21:20).
நாம் கிருபையின் யுகத்தின் கடைசி நாட்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறோம்.
சகரியா கூறுகிறார், “எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார்.” (சக 14:2,3).
பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர்இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
(சங் 125:2).
எதிரியின் படை எருசலேமிற்கு எதிராக போரிட அதனை சுற்றி வளைத்துக்கொண்டு யுத்தம் செய்ய தயாராக இருந்தார்கள், எருசலேமின் அழிவு மிக அருகாமையில் இருந்தாலும், சேனைகளின் கர்த்தர் அவர்களை சூழ்ந்து கொண்டிருந்தார். கர்த்தர் தன்னுடைய மக்களை ஒருபோதும் கைவிட மாட்டார். ஒரு வலிமை மிக்க போர்வீரனாக கர்த்தர் அவர்களுக்காக யுத்தம் செய்வார்.
சில வருடங்களுக்கு முன் திருச்சியில் நற்செய்தியை அறிவிக்கவும், செவிலிய மாணவிகளுக்கு ஆராதனை வகுப்பு நடத்தவும் நான் தயாராகி கொண்டிருந்தேன். பைபிள் இன் சில பிரதிகளை கையில் எடுத்துக் கொண்டு நான் படிகளில் கீழே இறங்கினேன். திடீரென்று யாரோ என்னை கீழே தள்ளுவதுப் போல நான் உணர்ந்தேன். எனக்குத் தெரியாமல் நான் படியிலிருந்து தலை கீழாக விழுந்தேன்.
நான் கண் விழுத்து பார்த்தபோது, ஒரு மிகவும் அழகிய காட்சியை கண்டேன். என் கையிலிருந்து கீழே விழுந்த பைபிள்கள் படிகட்டின் ஒவ்வொரு படியிலும் ஒவ்வொன்றாகப் பகிகளில் வைக்கப்பட்டிருந்தன. யாரோ என் தலையைப் பிடித்துத் தூக்க்கிச் செல்வது போல் உணர்ந்தேன். என் உடலிலோ என் எலும்புகலிலோ ஒரு காயம் கூட இல்லை. உண்மையில் தலையில் காயம் அல்லது பல எலும்பு முறிவுகள் ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருந்தன. என் உயிரைக் காப்பாற்ற என்னைப் பாதுகாக்க தேவதூதர்களை அனுப்பியவர் தேவன்.
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின்நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது,கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.(எசா 59:19). அன்புமிக்க ஜேப வீரர்களே, உங்களைச் சுற்று உங்களோடு போராடிக்கொண்டிருக்கும் எதிரிகளை நினைத்து கவலைப் பட வேண்டும். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். (சங் 34:7).
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். (மத் 24:6-8).
இன்று நம்மைச் சுற்றி நாம் பார்க்கும் பஞ்சம், போர், பூமி அதிர்ச்சி போன்றவைகள் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மிக விரைவில் வர இருக்கிறதை அறிவிக்கின்றன. அன்பு ஜெப வீரர்களே, உங்களுடைய சாட்சி என்னும் விளக்குகள் மற்றும் பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தின் எண்ணெயுடனும், மணமகனை சந்திக்க நீங்கள் தயாரா? ராஜாதி ராஜாவை சந்திக்க நம்மை தயார் செய்து கொண்டு, பிறரையும் தயார் செய்வோமா?.
எங்கள் அன்பின் பரலோக பிதாவே, சேனைகளின் கர்த்தராக எங்களை சூழ்ந்துகொண்டு எங்களை பாதுகாப்பதற்காக நன்றி செலுத்துகிறோம். வேதத்தில் உள்ள தீர்க்க தரிசன வசனங்கள் மூலமாகவும், எங்களைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் காரியங்களையும் கண்டு, உலகின் கடைசி நாட்களில் வந்து நிற்கிறோம் என்பதை அறிகிறோம் மேலும் மணவாட்டியை சந்திக்க கதவண்டையில் நீர் நிற்கிறீர் என்பதையும் நாங்கள் அறிவோம். உம்முடைய இரண்டாம் வருகைக்கு எங்களை தயார்படுத்தும், ஆயிரகணக்காண மக்களை தயார் செய்து மேகத்தின் நடுவில் உம்மை சந்திக்க வருமாறு செய்ய எங்களை அபிஷேகியும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே, ஆமேன்.!
Sol. Dr. I. Emi M. Petricia, AOJ
