தானியேல் – II
13-03-2022 – தேவ செய்தி

ர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்.

(1இராஜா 9:3).

சாலமோன் தன் வாழ்நாளில் செய்த மிகபெரிய சாதனை என்றால், இந்த பூமியில் கர்த்தருக்கு ஆலயம் கட்டியதுதான். கர்த்தர் தன்னுடைய மகிமையை அங்கு வெளிப்படுத்தினார் மேலும் அதை அவருடைய ஜெப வீடாக மாற்றினார். கர்த்தரிடம் ஜெபிக்கவும் அவரது ஆசீர்வாதங்களை பெறவும் அனைவரும் இந்த ஆலயதிற்குத்தான் வர வேண்டும். சாலமோன் அதை கட்டிய பிறகு, இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்து, ஆலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழியும் மட்டும் இஸ்ரவேலர்களின் அனைத்து நடவடிக்கைகளும் இந்த ஆலயத்தைச் சுற்றியே இருந்தன.

இயேசு கிறிஸ்துவின் மரணம் மற்றும் உயிர்ப்புக்குப்பின் கர்த்தருடைய வாசஸ்தலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அவர் மனிதர்களுடைய இருதயங்களில் வாசம் செய்வதை விரும்பினார்.

மனிதர்களின் இருதயங்களை தன்னுடைய வாசஸ்தலமாக மாற்ற கர்த்தர் இரண்டு நிபந்தனைகளை வைத்தார்.

ஏசா 57:15 – நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன்..

பரலோகத்தையும் பூமியையும் படைத்த கர்த்தர் நொறுங்குண்டு பணிந்த ஆவி உள்ளவர்களிடத்தில் வாசம் செய்கிறார்.

புதிய ஏற்பாட்டில், கர்த்தருக்கு ஆலயம் கட்ட விரும்புகிறவர்கள், இரண்டு காரியங்களை கவனிக்க வேண்டும்.

  • நொருங்கிய இருதயம் மற்றும் பரிசுத்தமாக இருத்தல் – தனிப்பட்ட நபரின் செயல்கள்.
  • வீட்டை பரிசுத்தமாக வைத்திருப்பது மேலும் அவருடைய நாமத்தை அங்கே என்றென்றைக்கும் உயர்த்தி வைப்பது.

அவருக்கு வாசஸ்தலத்தை கட்டுவது கர்த்தரின் வேலையாகும். சரியான இடத்தை தேர்ந்தெடுப்பது, திட்டதை உருவாக்குவத்உ, பயன்படுத்தப்படும் பொருட்கள், உள்துறை வடிவமைப்பு, அலங்காரம் பேன்ற அனைத்தும் கர்த்தருடையது. மனிதர்கள் நிலத்தை அதாவது தங்கள் இருதயத்தை அவருக்கு கொடுக்கலாம்.

மக்களாகிய நாம் எப்படி ஒரு வீடுகட்டுவதற்கு பொருத்தமான நிலங்களைத் தேடுகிறோமோ, அதேபோல் கர்த்தர் தம்முடைய வீட்டை கட்டுவதற்குரிய நிலத்தை தேடிக்கொண்டிருக்கிறார்.

தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது……” (2நாளா 16:9)


எங்கெல்லாம் நொருங்கிய உள்ளம் மற்றும் தாழ்ந்த ஆவியை அவர் காண்கிிறாரோ, தன்னுடைய முத்திரையை பதித்து அதை வங்கிகொள்கிறார். அதை தனதாக்கி கொள்கிறார். தன்னுடைய வீட்டை கட்டுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் அவரே செய்கிறார்.

அநேக மக்கள் இன்று தங்களுடைய பணம், நிலம், கட்டிடங்கள் என கர்த்தருக்கு தயாராக இருக்கிறார்கள்,ஏனென்றால் அப்படி கொடுப்பது அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் ஆசீர்வாதத்தை கொண்டுவருவதாக அவர்கள் கருதுகிறார்கள். ஆனால் கர்த்தருக்கு இவைகளில் ஒன்று கூட தேவையில்லையே. அவர் நொருங்கிய இருதயம் மற்றும் தாழ்ந்த ஆவியை தேடுகிறார்.

நம்மில் அநேகம் பேருக்கு இதை குறித்து தவறான புரிதல் இருக்கின்றது.

கர்த்தருக்கு வீடு கட்ட நாம் நிலத்தை தேடுகிறோம். ஆனால் கர்த்தர் இருதயங்களை தேடுகிறார்.

கர்த்தருடைய இந்த கையாளும் திறனை புரிந்து கொள்வதற்கு எனக்கு பல ஆண்டுகள் ஆனது. மக்கள் கர்த்தருடைய காரியத்திற்கு பணம், நிலம் மற்றும் கட்டிடங்களை கொடுத்தபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். பிறகு எல்லாவற்றையும் விட்டுவிட்டு கர்த்தர் புறப்படச் சொன்னபோது நான் மிகவும் வருத்தப்பட்டேன். இப்படி பல்வேறு நிகழ்வுகளுக்குப் பிறகுதான் நான் இதனை புரிந்து கொண்டேன். மனிதர்களுடைய நிலம், பணம், கட்டிடங்கள், மாறுதல்களை ஏற்படுத்தக்கூடிய உயர்ந்த பதவிகள் என இவைகள் கர்த்தர் சந்தோஷப்பட வில்லை. ஆனால் ஒரு இருதயத்தை கண்டுபிடித்து அங்கே தன்னுடைய வீட்டை கட்டுவதற்கு அவருடைய கண்கள் உலகமெங்கும் சுற்றிதிருந்து கொண்டு இருக்கிறது.

எப்பொழுதெல்லாம் யாராவது ஒருவர் தன்னுடைய இருதயத்தை கொடுக்க முன்வந்தால் உடனே கர்த்தர் அதை ஆராய்ந்து அறிகிறார்.

எபி 4:13 -
அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்.
  1. அது நொருங்கிய இதயமா (செய்த பாவங்களுக்காக மனம் வருந்துதல்)
  2. அது தாழ்ந்த ஆவியை கொண்டுள்ளதா

கர்த்தர் ஆராயும் போது இந்த இரண்டு குணங்களையும் கண்டுபிடித்தால் உடனடியாக அதை பரிசுத்தப்படுத்தவும், அங்கு என்றென்றைக்கும் தன்னுடைய நாமத்தை உயர்த்தியும் வைக்கிறார்.

நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும். இதற்குபின் அந்த அந்தஸ்து மாறிவிடுகிறது. அவன் இவ்வாறாக சொல்லத் தொடங்குகின்றான்,

மீக 4:5 - சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகியகர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
ஒரு முறை ஒரு தம்பதியினருக்காக மட்டும் நாங்கள் வெகுதூர பயணம் மேற்கொண்டோம்.  அந்த கூடுகைக்கு 20 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஒரு கணவன் மற்றும் அவரது மனைவி மட்டுமே வந்திருந்தனர். இந்த பயணத்தை நாங்கள் ரத்து செய்துவிடலாமா என்று கர்த்தரிடம் ஆலோசனை கேட்டபோது, வேண்டாம், தொடருங்கள் என்று கர்த்தர் சொன்னார். 

அநேக அற்புதங்கள் நடந்ததை நாங்கள் கண்டோம். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. எவ்வாறு கர்த்தர் மக்களை தேர்ந்தெடுக்கிறார், எப்படி அவரக்ளுடைய கண்களை திறக்கிறார், எவ்வாறு மனிதர்களுடைய இருதயங்களை தன்னுடை வாசஸ்தலமாக மாற்றுகிறார்… எல்லாமே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இது புதிய துவக்கமாக இருக்கிறது !!

Sr. Angelica AOJ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *