என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்;
மத் 10:22
கிறிஸ்தவர்களின் வாழ்க்கை பூக்கள் நிறைந்த பாதை அல்ல மாறாக முட்கள் நிறைந்தது. கிறிஸ்தவர்கள் வாழ்க்கை துன்பங்கள், அவமானங்கள், மேலும் உபத்திரவங்களால் நிறைந்துள்ளன.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வசனம் இதைத்தான் எனக்கு நினைப்பூட்டுகிறது.
உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். (யாகோபு 4:4)
நாம் உலகத்தையும் கர்த்தரையும் ஒன்றாக அன்பு செய்ய முடியாது.
ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. (1யோவா 2:15).
நாம் இரண்டு எஜமான்களுக்கு – செல்வம் மற்றும் கர்த்தருக்கு ஊழியம் செய்ய முடியாது.
கர்த்தருடைய அன்பிலும் ஐக்கியத்திலும் தொடர்ந்து இருக்க, இவ்வுலகின் நமது பல் செயல்களின் மீது போதுமான கட்டுப்பாட்டை கொண்டிருப்பது அவசியமாகும். பணத்தை அன்பு செய்வதன் மூலம் நாம் இயேசுவை அன்பு செய்ய முடியாது. மனிதர்களுக்கு முன்னிரிமை கொடுப்பதால் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்க இயலாது. நாம் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்கும்போது நம்முடைய உறவினர்கள், கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் என அனைவரும் நம்மை வெறுப்பார்கள். கர்த்தருக்கு முதலிடம் கொடுப்பதால் நாம் அவர்களுடைய தேவைகளை நிறைவேற்ற முடியாது எனவே நம்மை வெறுப்பார்கள்.
எபி 12:2 சொல்லியிருப்பது போல சிலுவையின் எல்லா துன்பங்களையும் அவர் சகித்துக்கொண்டார்.
அதேபோல நாம் கர்த்தரோடு என்றென்றும் இருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி நமக்கு முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே இயேசுவின் பெயரால் நாம் துயரங்களை சகிப்போம்.
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள், (1பேது 4:14)..
என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும்
நான் தமிழ்நாட்டில் இருக்கும் திருச்சி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். 25 ஆண்டுகளாக நான் ஒரு நிறுவன சபையில் உறுப்பினராக இருந்துவருகிறேன். ஜூம் வழியே 2020 இல் தளர்வுகள் இல்லாத ஊரடங்கு இருந்த நாட்களில் நடத்தப்பட்ட அனைத்து வரங்களின் பயிற்சி பள்ளிகளிலும் நான் பங்கு கொண்டேன் மேலும் இயேசுவின் படை அணியால் நடத்தப்பட்ட அனைத்து கூட்டங்களிலும் பங்கேற்றேன். இதன் மூலமாக கர்த்தர் யார் மற்றும் அவரை அறிந்து கொள்ள எனக்கு கிருபை வழங்கப்பட்டது. கர்த்தரை தெரிந்து கொள்வது, கர்த்தரைப் பற்றி தெரிந்துகொள்வது இரண்டிலும் வித்தியாசம் உள்ளது.
நிறுவன சபையில் இருந்த பொழுது நான் அமைதியாகவே இருந்தேன் ஆனால் இங்கே கர்த்தருடைய கிருபையால் மூன்று அணி சபைகளை என்னால் நடத்த முடிந்தது. என்னுடைய பலவீனத்திற்கும் மத்தியில் நான் காலை ஆராதனையில் விடாது தொடர்ந்து பங்கு கொள்கிறேன். என்னுடைய குடும்ப சூழ்நிலை சாதகமாக இல்லாவிட்டாலும் என்னால் முடிந்ததை நான் கர்த்தருக்கு செய்து கொண்டு வருகிறேன். அநேக வேளைகளில் என் தேவன் என்னை வழி நடத்துவதை நான் அறிந்திருக்கிறேன். கர்த்தருக்கே மகிமை உண்டாகட்டும்.
SOL. CHRISTY MANOHAR ,AOJ
