இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெபஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள்.
லூக் 21:12.
சீடர்கள் நற்செய்தியை அறிவிப்பதால் அவர்களுக்கு ஏற்படபோகும் துன்புறுத்தல்களைப் பற்றி இயேசு இங்கு தீர்கதரிசனம் உரைக்கிறார். நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்வில் கூட அவர் எப்படி கேலி செய்யப்பட்டார், சவுக்கால் அடிக்கப்பட்டார், முகத்தில் அடிக்கப்பட்டார், அவர் முகத்தில் எச்சில் துப்பினர், யூதர்களின் கவுன்சில் முன் கொண்டுவரப்பட்டார், பிலாத்து முன்னும், ஏரோது முன்பும் நின்றார், இறுதியாக சிலுவையில் அறையப்பட்டார்,
பவுலும் தான் எப்படி உபத்திரவங்களை அனுபவித்தார் என்பதை சொல்கிறார். யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். (2கொரி 11:24,25).
பவுல் ரோமாபுரியில் சிறைச்சேதம் செய்யப்பட்டார்.
இயேசுகிறிஸ்துவின் சீடர்களும் பல் வேறு உபத்திரவங்களை கடந்து சென்றனர், அரசர்களுகு முன்பாக நின்று சாட்சி கொடுத்தனர், சென்ற இடமெல்லாம் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவித்தனர், சிறைப்பட்டவர்களை விடுதலையாக்கினர், மேலும் வியாதியஸ்தர்களை சுகமாக்கினர்.
மலை பிரசங்கத்தில் கூட உபத்திரவத்தைப் பற்றி இயேசு என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. மத் 5:10-12
கர்த்தருடைய பிள்ளைகளாகிய நாமும் பல்வேறு நிலைகளில் உபத்திரவத்தை எதிர்கொள்கிறோம். இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளுக்காக வலுவாக நின்றதன் காரணமாக மக்கள் என்னப்பற்றி தவறாகப் பேசியிருக்கிறார்கள்.
இவைகளை நாம் எவ்வாறு பார்க்க வேண்டும் என்று வேதம் சொல்லுகிறது தெரியுமா? சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; மத் 5:12..
உயிருள்ள ஜீவபலியாக நம்மை கர்த்தருக்கு ஒப்புகொடுத்துவாழ இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தேவன் கிருபையை உங்களுக்கு தருவாராக,
மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். (1பேது 3:8,9)
Dr Deepthi Christus.
