அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்.
லூக் 21:10
இயேசு கிறிஸ்துவின் சீடர்கள் அவரிடம் உலகின் முடிவு மற்றும் அவருடைய வருகையின் அடையாளம் என்ன என்று கேட்டனர். இயேசு பல் வேறு அடையாளங்களை அவர்களுக்குச் சொன்னார், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யம் எழும்பும் என்பது ஓர் அடையாளமாகும். வருங்காலத்தைப் பற்றி கர்த்தர் வேதத்தில் அநேக இடங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது அவர் எவ்வளவு நல்லவர் என்பதை காட்டுகிறது.
பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏசா 42:9
கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் ஒரே புத்தகம் பைபிள்.
வேதத்தின்படி இரண்டு ராஜ்யங்கள் உலகில் இருக்கின்றன.
- கர்த்தருடைய ராஜ்யம் அல்லது ஒளியின் ராஜ்யம் மற்றும் சாத்தானின் ராஜ்யம்
- அல்லது இருளின் ராஜ்யம்.
கடைசி காலங்களில் அந்தகாரம் அதிகரிக்கும். இன்று பாவம் நம்முடைய விரல் நுனியில் கிடைக்கிறது என்பதை நன்கு அறிவோம்.
மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும். (2திமோ 3:1-4).
இன்றைய உலகம் மேல் சொன்னதுபோலத்தான் இருக்கிறது. நாம் கடைசி காலங்களில் இருக்கிறோம். அந்தகாரத்தின் ராஜ்யம் நமக்கு எதிராக எழும்ப போகிறது.
என்னுடை வாழ்வில் ஒரு முறை நான் அந்தகாரத்தால் மூடப்பட்டேன். நான் மன சோர்வடைந்தேன். என்னுடை அன்றாட வாழ்வின் கடைமைகளை கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. என்னால் சரியாக தூங்க இயலவில்லை. விசுவாசிகளுடைய விசுவாசமுள்ள ஜெபத்தால் மன உளைச்சளில் இருந்து வெளியே வர இயேசு எனக்கு உதவி செய்தார்.
நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.(ரோம 12:21)
ஜெயம்கொள்பவர்களுக்கு பரிசு உண்டு. எனவே நாம் வெல்லுவதற்கு முயற்சி செய்வோம்.
ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். (லூக் 21:36).
உபத்திர்வங்களிலிருந்து தப்புவதற்கான ஒரு வழியை இயேசு நமக்கு கொடுத்திருக்கிறார்.
அந்தகாரத்தை மேற்கொண்டு வெற்றியாளார்களாக, ஜீவ கிரிடத்தைபெற இயேசுவே எங்களுக்கு உதவி செய்யும்.
Sol. Saji Kyle, Aoj
