இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.
(எரே 33:6).
08-12-2019 அன்று இந்திய சபையில் மேற்கண்ட வசனத்தை பேசினார்.
இந்திய சபை கன்னியாகுமரியில் இருந்து கஷ்மீர் வரை பரவியுள்ளது. கர்த்தருடைய கிருபை மற்றும் நன்மைக்காக நன்றி. கடந்த 25 ஆண்டுகளாக கர்த்தர் பல்வேறு பாஸ்டர்களையும், நற்செய்தி அறிவிப்பாளர்களையும் எழுப்பி இருக்கிறார். அவர்கள் கடினமாக உழைத்தார்கள்,, தலையிலிருந்து கால்வரை, தெற்கிலிருந்து வடக்கு வரை கிழக்கிலிருந்து மேற்குவரை இந்தியா முழுவதும் சபைகள் நிறுவப்பட்டிருக்கிறது.
இப்பொழுது இருக்கும் இந்திய சபையின் நிலையை இரண்டு உதாரணங்கள் மூலம் காட்டப்பட்டது.
உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமில்லை; அது காயமும் வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது.
ஏசா 1:6
இந்திய சபை மனித உடலோடு ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. இது இயேசு கிறிஸ்துவின் உடல் ஆனால் காயமும் வீக்கமும் நிறைந்துள்ளது. கர்த்தர் அதை ஆராய்ந்து பார்த்தார், அதை குணமாக்கினார்.
இந்திய சபை ஒரு கட்டிடத்தோடு ஒப்பிடப்பட்டுள்ளது.கி.மு. 0 வில் பரிசுத்த ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் அஸ்த்திவாரத்தின் மீது கட்ட ஆரம்பித்தார். கடந்த 2019 ஆண்டுகளாக அப்போஸ்தலர்களும், பவுலும் மற்றவர்களும் அதை கட்டினார்கள். எண்ணமுடியாத மக்கள் இதற்காக வேலை செய்திருக்கிறார்கள். இந்த காலத்தில் இதற்காக நாம் பணிஅமர்த்தப்பட்டிருக்கிறோம்.
எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன்..
1கொரி 3:10
ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால்,
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும் (1கொரி 3:12,13).
இந்திய திருச்சபைக்கு 2014 முதல் “அக்கினி பரிட்சையின் நாட்கள்”. ஒவ்வொருவரும் கட்டிய பொருள் அக்கினி பரிட்சைக்கு ஆளகிறது. பயனற்ற பொருட்களால் கட்டப்பட்ட அந்த பகுதிகளை இடித்து கட்டிடத்திலிருந்து அகற்ற வேண்டும். காய்ந்தபுல் மற்றும் வைக்கோல் கொண்டு கட்டப்பட்ட அந்த பகுதிகள் அக்கினியால் எரிக்கப்படும். செல்வ செழிப்புக்கான நற்செய்தி மற்றும் மேலோட்டமான படிப்பினைகளின் அடிப்படையில் கட்டப்பட்ட சபைகள் சோதிக்கப்படும், பயனற்றவை என்று கண்டறியப்பட்டால் அகற்றப்படும்.
ஒரு போதகர் தன்னுடைய அனுபவத்தை என்னோடு பகிர்ந்துகொண்டார்.
நான் கடந்த 23 ஆண்டுகளாக சபையை நடத்திக்கொண்டு வருகிறேன். என்னுடைய விசுவாசியினுடைய மகள் ஒரு இந்து பையனோடு ஓடிவிட்டாள். இந்த சபையின் முதல் விசுவாசி அவர்தான் மேலும் 23 ஆண்டுகளாக அவர் எங்களோடு இந்த சபையில் இருக்கிறார்.
நான் அந்த குடும்பத்தினரை சமாதானப்படுத்தவும், அவர்களுக்காக ஜெபிக்கவும் சென்றிருந்த போது, தன் மகள் செய்தது நியாயம்தான் என்று அவர்கள் சொல்வதை கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன்.
நான் எப்படிப்பட்ட ஊழியம் செய்கிறேன் என்று ஆராய்ந்துபார்க்க வேண்டும். நம்மை தாழ்த்தி இந்திய சபைக்காக ஜெபிப்போம்.
அனைத்து காயங்களுடன் சபையை நாம் இயேசு கிறிஸ்துவிடம் ஒப்புகொடுப்போம்.
இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. ஏசா 1:5.
கர்த்தர் இரண்டு காரியங்களை சபைக்கு வாக்களிக்கிறார்.
சுகமாக்குதல்
எல்லா நோய்களிலிருந்தும் சபை சுகமாக்கப்படும்.
ஆரோக்கியம்
சபைக்கு போதுமான அளவு எதிர்ப்பு சக்தி இருக்கும்படியாக கர்த்தரே பார்த்துக்கொள்வார்.
ஜெபம்
அப்பா பிதாவே முழு சபையும் அதில் இருக்கும் ஒவ்வொரு விசுவாசியும் நீர் வாக்களிக்கும் அமைதி மற்றும் உண்மையை மகிழ்வுடன் அனுபவிப்பார்களாக. ஆமேன்.
Sr. Angelica AOJ
