அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள் மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
லூக் 19:14.
கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் என்பவர் 58 வயதான ஆஸ்திரேலிய கிறிஸ்தவ மிஷனரி ஆவார்..இவர் இந்தியாவில் தொழுநோயாளிகள் மத்தியில் தன்னலமற்ற பணியுடனும் அர்ப்பணிப்புடனும் சேவை செய்து வந்தார். ஜனவரி 22 ஆம் தேதி இரவு கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்களுடன் – 10 வயது பிலிப் மேலும் 7 வயது திமோதியுடன் – அவர் பணியாற்றிய மக்களால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர்.
அவரை வெறுத்தனர்: அவருடைய ஏழ்மையான பிறப்பிற்காகவும், சிலுவையில் அறையப்பட்டதற்காகவும், அவருடைய கற்பனைகளுக்காகவும், பரிசுத்ததிற்காகவும் அவரை இகழ்ந்தனர்.
அவருக்கு ஒரு செய்தியை அனுப்பினர்:
அதிருப்தியடைந்த குடிமக்கள்அவருடைய ஆட்சி என்னவாக இருக்குமோ என்று பயந்து, அவர் ஆட்சியாளராக நியமிக்கப்படுவதை எதிர்த்து அவருக்கு எதிராக ஒரு ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள்.
மத் 2:22 – ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய்,
இந்த உண்மை யூதர்களின் நினைவில் “புதியதாக” இருந்ததால், இந்த உவமையை நம்மை மிகவும் வியக்க வைக்கிறது.
யோவா 1:11 - அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
யூதர்கள் இயேசுவை நிராகரித்தார்கள், அவருடைய ஆட்யின் கீழ் இருக்க மனத்தில்லாமல் இருந்தனர், சற்று நேரத்திற்குப் பின் ஒரு கொலையாளியை ஏற்றுக்கொள்ளவும் தயாரானார்கள். மகிமையின் தேவனை கொன்றவர்கள், தங்கள் ஆத்துமாவை மீட்பவரை விட தங்கள் கோபத்தில் ஒரு கொலைகாரனை விரும்புவதில் எந்த ஆச்சரியமுமில்லை.
பிரபுவாக இருந்த ஒருவன் இயேசுவின் பிரதிநிதி மற்றும் இறுதி தீர்ப்பு மரணத்தைவிட மிக மோசமானது – இது நரகத்திற்கும், நெருப்பு ஏரிக்குமான நித்திய தீர்ப்பாகும். இயேசுவை நிராகரிப்பதால் இயேசு யார் என்றும் அவர் என்ன என்பதிலும் எந்த மாற்றமும் வரபோவதில்லை. அவரை நிராகரிப்பவர்களுக்கு நித்திய நரக தண்டனை உண்டு.
கிருபை இழந்தவர்களுக்கு கிறிஸ்துவின் நுகம் தாங்கமுடியாதது ஆனால் இரட்சிக்கப்பட்ட பாவிக்கு அது எளிதானது மற்றும் இலகுவானது. நம்மையே நாம் நியாயம் தீர்ப்போம்….. இந்த சுமையை நாம் ஏற்றுக்கொள்ளுகிறோமா அல்லது இதை எடுத்துப்போட நினைக்கிறோமா?
ஜெபம்: அன்பு தகப்பனே உம்மிடம் எங்களை ஒப்படைக்கின்றோம். நான் தீர்ப்பளிக்காமல் உமது னபின் ஆழத்தைப் புரிந்துகொள்ள எனக்கு உதவும்.
ஆமேன்.
Sol. Pratibha AOJ
