……. அவர்உங்களுக்குமுன்னேகலிலேயாவுக்குப்போகிறார்; அங்கேஅவரைக்காண்பீர்கள்;
மத் 28:7
இந்த செய்தியை விண்ணிலிருந்து வந்த கர்த்தரின் தூதன், மகதலேனா மரியாளுக்கும், மற்றொரு மரியாளுக்கும் இயேசு வைக்கப்பட்ட கல்லறையைப் பார்க்கச் சென்றபோது அவர்களுக்கு தெரிவித்தான். இயேசு கலிலேயாவுக்கு போவார் அங்கே தன்னுடைய சீடர்களை அவர் சந்திப்பார் என்று. மரணத்திற்கு பிறகு உயிர்ப்பு உள்ளது என்பதை இயேசு தன் உயிர்ப்பின் மூலம் நம் எல்லோருக்கு முன்பாக நிரூபித்துள்ளார். மரணத்திற்குப் பின் சரீரத்தின் உயிர்த்தெழுதலைத் தவிர நாம் இந்த பூமியில் இருக்கும் போது நம் ஆவியும் உயிர்த்தெழுதலை பெற முடியும்.
சவுல் – அப்போ 9:3-20 : இயேசுவை சந்தித்த பிறகு ஆன்மீக மரணத்திலிருந்து (பாவம், வெறுப்பு மற்றும் கிறிஸ்தவர்களை கொடுமைபடுத்துவது) உயிர்பிக்கப் பட்டான் மேலும் அதன் பின் அவன் தமிஷ்க்கு சென்றான். அங்கு அவனுக்கு பார்வை திரும்ப கிடைத்தது, அவன் ஞானஸ்ஞானம் பெற்றான் அதற்குபின் “கிறிஸ்து தேவனுடைய குமாரன்” என்று தேவாலயங்களில் பிரசங்கித்தான். அநேக நிரூபங்களை அவர் புதிய ஏற்பாட்டில் எழுதியுள்ளார்.
சகேயு – லூக் 19:2-10 – காட்டத்தி மரத்தில் சகேயுவை கண்டு இயேசு அவனோடு பேசினார். அதன்பின்னர் அவனும் மரணத்திலிருந்து (பாவம், மக்களை ஏமாற்றி வரி வசூலிப்பது, செல்வத்தை சேர்த்துவைப்பது) உயிர்பிக்கப்பட்டான், இரட்சிக்கப்பட்டான், மேலும் தன்னுடைய செல்வத்தில் ஏழைகளுக்கு உதவும் ஒரு சாதாரண வாழ்வை நடத்தினான்.
லாசர் – யோவா 11:1-45 – தன்னுடைய நண்பன் லாசர் வியாதிப்பட்டிருக்கிறான் என்று கேள்விப்பட்டு சில நாட்களுக்கு பிறகு அவனை சந்திக்க இயேசு பெத்தானியா சென்றார். அவர் அங்கு சென்றபின், லாசர் மரித்துவிட்டதாகவும், கல்லறையில் அவனை வைத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதென்றும் அவருக்கு சொல்லப்பட்டது. இயேசு லாசரின் கல்லறைக்கு எதிரே நின்றார், கல்லை அகற்றுமாறு கூறினார், பின்னர் லாசரை வெளியே வருமாறு கட்டளையிட்டார். தன்னுடைய கால்களும் கைகளும் பிரேத சீலையால் கட்டப்பட்டவனாகவும், முகம் சீலையால் சுற்றப்பட்டவனாகவும் லாசர் வெளியே வந்தான்.
2005 ஆம் ஆண்டில் எனது 52வது வயதில் நான் கூட ஆன்மீக மரணத்திலிருந்து உயிர்பிக்கப்பட்டேன். நான் ஒரு பாவம் நிறைந்த உலகபிரகாரமான வாழ்வை பணத்திற்கு பின்னால் ஓடி வாழ்ந்து கொண்டிருந்தேன். மனந்திரும்புவதற்கு எனக்கு கர்த்தர் கிருபைகொடுத்தார் அதன்பின் நான் ஒரு புதிய வாழ்வை துவங்கினேன். அன்று முதல் கர்த்தருடைய பரலோக ராஜ்யத்தின் காரியங்களில் ஈடுபட்டு வருகிறேன் மேலும் கர்த்தருக்காக நிற்கிறேன். இன்று முதல் என்னால் முடிந்தவற்றை அவருடைய ராஜ்யம் இந்த உலகில் வருவதற்காக நான் செய்து கொண்டிருக்கிறேன். அவ்வாறு செய்வதில் நான் பெருமை அடைகிறேன்.
ஜெபம்: கர்த்தாவே பாவத்திற்கு மரிக்க எங்களுக்கு கிருபைதாரும் அதனால் எங்களுடைய அன்றாட வாழ்வில் நாங்கள் உயிர்தெழுதலை அனுபவித்து உம்முடைய ராஜ்யத்திற்காக வேலை செய்ய எங்களை திடப்படுத்தும். ஆமேன்.
Sol. Leslie AOJ
