உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக.
லூக்கா 17:3
நாம் திருத்தத்திற்கு விரோதமான யுகத்தில் வாழ்கிறோம். ‘முடியாது’ என்கிற நான்கெழுத்து வார்த்தை தற்கால மொழியாகிவிட்டது. உங்கள் நம்பிக்கையின்மை கர்த்தருடைய நியாய தீர்ப்பை நிச்சயமாக கொண்டுவரும் என்று கிறிஸ்தவரல்லாத நண்பர்களுக்கு சொன்னால் அதை கேட்க அவர்கள் விரும்புவதில்லை. நம்முடைய கிறிஸ்தவ நண்பர்களும் ‘திருத்தம்’ செய்வதை விரும்புவதில்லை. இது மிகவும் வருத்தத்தை தருகிறது ஏனென்றால் திருத்தம் ஆத்துமாவுக்கு நன்மைதரும். இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; (நீதி 10:8) என்று சாலொமோன் சொல்லுகிறான்.
நம்முடைய சகோதரர்களை நாம் எப்பொழுது திருத்தலாம்?
சகோதர சகோதரிகளுடைய இரட்ச்சிப்பு கேள்விகுறியாக இருக்கும் போது நாம் அவர்களை திருத்தலாம்.
சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களிலொருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். (எபி 3:12). இந்த வசனம் சகோதரர்களுக்கு சொல்லப் பட்டிருக்கிறது. கிறிஸ்தவர்கள் என்று நம்மை அழைக்கும் நாம் நம்முடைய இருதயங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இது தனிப்பட்ட முறையில் மட்டும் அல்ல சபையாகவும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
ஒரு சகோதரன் அல்லது சகோதரி அவிசுவாச வாழ்க்கை வாழும்போதோ அல்லது அவருடைய விசுவாசத்தின் உண்மைத் தன்மை கேள்விகுறியாக இருக்கும்போதோ நாம் அவரை விசாரிக்கலாம்.
அவர்களுடைய இருதயங்களை மென்மையாக்கவும், மனந்திரும்புதலுக்கு அழைத்துச் செல்லவும், கர்த்தருடைய கோபத்திலிருந்து அவர்களை காப்பாற்றவும் ஆவியானவர் பயன்படுத்துவது உங்களுடைய ஆறுதலான வார்த்தைகளைத்தான்.
மனந்திரும்பாத பாவத்தின் ஆபத்தை உணர்ந்த இயேசு நம் ஒருவரை ஒருவர் திருத்தச் சொல்லியிருக்கிறார். மத் 18:15-16 இல் ஒரு சகோதரன் இன்னொரு சகோதரனுக்கு எதிராக பாவம் செய்யும் பொழுது அவனை திருத்துவதற்கான வழிமுறைகளை இங்கு சொல்லுகிறார். பாவத்தின் இயல்பை பற்றி இயேசு இங்கு வெளிப்படுத்த வில்லை. ஆனால் பாவம் செய்தவர் அந்த பாவத்திற்காக மனந்திரும்பாவிட்டால் அந்த நபரை கிறிஸ்துவில் ஒரு சகோதரனாகவோ அல்லது சகோதரியாகவோ கருதக்கூடாது என்பதை தெளிவாக கூறுகிறார். பின்னர் பாவம் செய்தவர் எப்படி தன்னுடைய குற்றத்தை உணருவார்? அவனை திருத்தக்கூடிய ஒரு வார்த்தை தேவை. தனிபட்ட முறையில் அவரைடைய குற்றத்தை நாம் உணர்த்த வேண்டும். (15), கேட்காத பட்சத்தில் இரண்டொரு மனிதர்களோடு அவனுடைய குற்றத்தை அவனுக்கு உணர்த்தலாம். (16).
நமக்கு ஒரு எச்சரிக்கையும் கொடுக்கப்படுகிறது. சில வேளைகளில் பதில் கிடைக்காததுதான் ஆனால் அதுதான் சிறந்தபதிலாகவும் இருக்கிறது. கீழ்கண்ட வசனங்களை பாருங்கள்.
மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. – நீதி 19:11
பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும். – நீதி 10:12
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். 1பேது 4:8
ஜெபம்:
கிருபையும் மகா இரக்கமும் நிறைந்த பரலோக பிதாவே, உமக்கு எதிராக சகோதரர்கள் பாவம் செய்யும்பொழுது அவர்களை திருத்துவதற்கான இருதயத்தை எங்களுக்கு அளித்தமைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். தேவனே, எங்களுக்கு ஞானத்தை தாரும் அதனால் சோர்வடைந்த பரிசுத்தவான்களின் நம்பிக்கையைப் புதுபிக்க நாங்கள் பயன்படுத்தும் திருத்ததின் வார்த்தைகள் அவர்களுக்கு இனிமையாக இருப்பதாக, சில வேளைகளில் எங்கள் வார்த்தைகள் அவர்களுக்கு உதவி செய்யாமல், துன்பத்தை தரகூடியதாக கூட இருக்கலாம். எனவே எப்போது அவர்களை உணரவைக்க வேண்டும் எப்போது காணாமல் இருக்க வேண்டும் என்று அறிந்துகொள்ள உம்முடைய ஞானத்தை தாரும், இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமேன்.
Sol.Olivia Capitola J AOJ
