மரணத்தின் போது ஆத்துமாவை எடுத்துச்செல்ல தேவதூதர்கள் வருவார்கள்.
பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான்..
(லூக் 16:22).
ஆம் நாம் இறக்கும் போது தனியாக இருக்க மாட்டோம் என்று பைபிள் குறிப்பிடுகிறது. நாம் தகுதியுடையவராக இருந்தால் தேவதூதர்கள் நம்முடன் பரலோகத்திற்கு செல்லும் பயணத்தில் வருவார்கள். இந்த உவமையில் இயேசு மிகவும் துன்பப்பட்ட தரித்திரனைப் பற்றி சொல்லுகிறார். அவன் மரித்தப்பின் தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான், மகிழ்ச்சி மற்றும் சந்தோஷம் நிறைந்த ஒரு நிலை, அங்கு அவன் தேற்றப்பட்டான்.
இதுதான் தேவதூதர்களின் சேவை, ஒரு விசுவாசி மரிக்கும் போது இவ்வாறுதான் செய்வார்கள்.
யோவான் 11:25-26 – இயேசு சொன்னார், நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்;
அவர் நம்முடைய மரணதருவாய் வரை நம்மோடு இருக்கிறார்.
நம்முடைய பாவத்தின் காரணமாக நரகத்திற்கு செல்ல தகுதியுடையவர்கள் ஆனால் இயேசு நம்முடைய நீதிதீர்ப்பையும், நாம் அனுபவிக்க வேண்டிய நரகதண்டனையையும் தன்மேல் ஏற்றுக்கொண்டார். அவர் நமக்கு நித்திய வாழ்வை பரிசாக அளிக்கிறார, நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான் அதை பெற்றுக்கொள்ள வேண்டும்.
யோவா 5:29 – அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
லூக் 16:22 இல் இரண்டுவகையான அனுபவங்களை பார்க்கிறோம், ஒரு நேரத்தில் தரித்திரனாகிய லாசர் செல்வந்தரின் கதவுக்கு அறுகில் மயக்கம் போட்டு விழுகிறான், அடுத்த நிமிடமே தேவ தூதர்கள் அவனை ஏந்திக் கொண்டு பரலோகத்திர்கு செல்கிறார்கள். இவ்வுலக வாழ்வில் அவனுடைய புண்ணை நக்கிய நாய்கள் மட்டுமே அவனுடைய நண்பர்களாக இருந்தன, ஆனால் அவன் மரித்தவுடன் தூதர்கள் அவனை வாரி அணைத்துக்கொண்டு பரலோகத்தில் அபிரகாமினிடத்திற்கு கொண்டு செல்கிறார்கள்
செல்வந்தனும் மரித்தான் ஆனால் தேவ தூதர்கள் அல்ல, கெட்ட தூதர்கள் அபிரகாமின் பக்கத்தில் அல்ல மாறாக நரகத்திற்கு அவனை கொண்டு சென்றார்கள்.
தேவதூதர்கள் நமக்கு உதவி செய்ய நமக்குகொடுக்கப்பட்ட பணிவிடை ஆவிகள். சில மாதங்களுக்கு முன் மோசே எனக்கூடிய ஒரு வாலிப விசுவாசி விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயமடைந்தார். அவர் உயிர்பிழைப்பது என்பது முடியாத ஒன்றாக இருந்தது ஆனால் ஒரு அற்புதம் நடந்தது. இயேசு கிறிஸ்து தன்னுடைய உயிர்ப்பின் வல்லமையை மோசேவின் மீது ஊற்றினார், 10 நாட்களுக்குள் அவனுக்கு புது வாழ்வு கிடைத்தது. இது பரத்திலிருந்து அவனுக்காக கொடுக்கப்பட்ட வார்த்தையாகும், அதே நாளில் அநேக நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர். கர்த்தர்தான் மனித உருவில் தம்முடைய தூதர்களை அனுப்பி மோசேவை மருத்துவமனையில் சேர்த்தது, மருத்துவம் பார்த்தது, பணம் செலுத்தியது எல்லாம் என்று நம்புகிறேன். மோசேவோடு இருந்த இரண்டு விசுவாசிகளும் அவனை அட்மிட் செய்த மருத்துவமனையில் விடாமல் கர்த்தருடைய வார்த்தையை (வெளி 2:10) வெளியிட்டனர்.
மத் 25:46 -அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
நம்முடைய வாழ்க்கை ஒரு ரோஜக்களின் படுக்கை அல்ல, ஆனால் நமக்கு முன்னால் பரலோகம் உள்ளது, அங்கு நாம் எப்போதும் கர்த்தரின் முன்னிலையில் பாதுகாப்பாக இருப்போம் என்கிற இந்த பெரிய உண்மை நம்மை ஒவ்வொருநாளும் ஊக்கப்படுத்தி, திடப்படுத்துவதாக.
Sol. Poonam Batra, AOJ
