தானியேல் – II 23-01-2022 – தேவ செய்தி

எல்லாவற்றையும்அநுபவிக்கஎனக்குஅதிகாரமுண்டு, ஆகிலும்எல்லாம்தகுதியாயிராது; எல்லாவற்றையும்அநுபவிக்கஎனக்குஅதிகாரமுண்டு, ஆகிலும்நான்ஒன்றிற்கும்அடிமைப்படமாட்டேன்

1 கொரி 6:12

சிலர் சொல்லுகின்றனர் – எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு.

ஆனால் எல்லாம் எனக்கு தகுதியாயிராது.

எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு ஆனால் என்னை அடிமையாக்கும் எதையும் நான் அனுமதிக்க போவதில்லை. நான் வெற்றியாளராக இருக்க வேண்டும்.

கர்த்தரின் கிருபையைப் பற்றிய கிறிஸ்தவ போதனைகள் விசுவாசிகளுக்கு எதை ஏற்றுக்கொள்ளலாம் எதை ஏற்றுக்கொள்ள கூடாது என்ற நிச்சயமற்ற தன்மை இருக்கலாம்.

ஒருபுறம் கிறிஸ்துவில் இருப்பவர்கள் மோசேயின் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் அல்ல என்று வேதம் வலியுறுத்துகிறது. உதாரணத்திற்கு, கிறிஸ்தவர்கள் பழைய உடன்படிக்கையில் தடைசெய்யப்பட்ட விலங்குகளை உண்ணலாம் ஆனால் யுதர்களுக்கென இருக்கும் சிறப்பான விடுமுறைகளில் பங்கேற்க கூடாது.

மேலும்   1கொரி 6:11 இல் –  ஆயினும்கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

அந்த பரிவர்த்தனை முடிந்துவிட்டது. நாம் இரட்சிக்கப்பட்டோம். அப்படியெனில் நாம் விரும்புவதை ஏன் தொடர்ந்து செய்யக்கூடாது?

நாம் வேசிதனத்தில் ஏன் பங்குகொள்ளக் கூடாது? இயற்கையாக வரும் அனைத்தையும் ஏன் செய்யக்கூடாது? நம்முடைய சரீரம் விரும்புவதை ஏன் செய்யக்கூடாது?

இந்த கேள்விக்குத்தான் பவுல் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார். எல்லாவற்றையும் செய்ய எனக்கு அதிகாரமுண்டு என்று சொல்லுகிறார். ஆனால் எல்லாம் எனக்கு தகுதியாய் இராது என்கிறார். எல்லாம் நமக்கு உதவிசெய்யக்கூடியவை அல்ல. கொரிந்து சபை விசுவாசிகள் ‘சுதந்திரத்தை’ பாவம் செய்வதற்கு உரிமமாக பயன்படுத்தினர்.

1கொரிந்தியர் 6:15 இல் வேசியை பற்றிய குறிப்பை காணமுடிகிறது. “உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. நிச்சயமாக முடியாது.

கொரிந்து சபை கிறிஸ்தவர்கள் விபச்சார சேவையை பயன்படுத்த தங்களுக்கு சுதந்திரம் இருப்பதாக நினைத்தார்கள். இது கொரிந்து நகரில் கலாச்சார ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இது உண்மைதான், பாவமோ மற்ற எதுவுமே  இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்கமுடியாது.

ரோமர் 8:38,39 – மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

எனவே இது நம்முடைய பாவ செயல்களை நியாயபடுத்துகிறதா?

இது விசுவாசிகளுக்கு ஒரு தவறான தரநிலை என்று பவுல் எழுதுகிறார்.

கிறிஸ்தவ சுதந்திரம் என்பது எந்தவொரு நடத்தைக்கும் அல்லது அணுகுமுறைக்கும் ஒரு சாக்கு போக்கு அல்ல.

கிறிஸ்துவில் நாம் இப்பொழுது என்னவாக இருக்கிறோமோ அதற்கு தகுந்தபடி வாழ, பவுல் நம்மிடம் கேட்கிறார். கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கான ஒரு எடுத்துக்காட்டாக இதை ஏற்றுக்கொள்வார்களாக.

கிறிஸ்தவ வாழ்வின் தரத்தை நிர்ணயிக்க நாம் பார்க்க வேண்டியது – ஒரு பழக்கம் நமக்கு உதவிகரமாக உள்ளதா அல்லது அது நம்மை அடிமைப்படுத்துகிறதா என்பதைதான் என்று பவுல் வலியுறுத்துகிறார்.

செக்ஸ் என்பது உடலின் ஒரு செயல் மாத்திரம் அல்ல அதற்கும் மேலானது. திருமணத்தில் இரு நபர்களை ஒரே உடலாக இணைக்க கர்த்தர் இதை வடிவமைத்தார். மற்றொரு நபருடனான அந்த ஐக்கியம் கிறிஸ்துவை உள்ளடக்கியது. நாமும் அவருடைய ஐக்கியத்தில் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நம்முடைய சரீரம் உயிர்த்தெழ செய்யப்படும், நம்முடைய சரீரத்தின் மூலமாக நாம் கர்த்தருக்கு மகிமை சேர்க்க வேண்டும்.

“நான் ஒன்றுக்கும் அடிமைப்பட மாட்டேன்” – என்ற இந்த வசனத்தில்  பவுல் சொல்லுகிறார் நான் யாருடைய அதிகாரத்திற்கு கீழும் இருக்க மாட்டேன். (விபச்சாரியின் சரீரத்தில் நடப்பது போல).

எனவே, கிறிஸ்தவர்களிடையே, உணவுக்கான ஒரு சட்டத்தை பாலியல் தூய்மைக்காக பயன்படுத்த முடியாது.  

சிலர் கேட்கலாம், என்னுடைய சரீரத்திற்கு உணவு வேண்டும், நான் சாப்பிடுகிறேன், அதேபோல என்னுடைய சரீரத்திற்கு செக்ஸ் வேண்டும் எனவே நான் விபச்சாரியிடம் செல்கிறேன்.  இதில் என்ன தவறு இருக்கிறது?

சரீரமானது விபச்சாரத்திற்கு அல்ல . கர்த்தருக்காக, கர்த்தர் சரீரத்திற்காக.

பொருத்தமற்ற உணவுக் கட்டுப்பாடுகளுக்குப் பொருந்தும் அந்த சட்டத்தை பாலியல் ஒழுக்க கேட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்று பவுல் எச்சரிக்கிறார்.

நம்முடைய அதிகமான காம பசியின் காரணமாக நம் உடலை பாலியியல் ஒழுக்கக் கேட்டிற்காகத்தான் கர்த்தர் படைத்திருக்கிறார் என்று நாம் எண்ணலாம், ஆனால் கர்த்தர் நமது உடலை பாவம் செய்வதற்காக உருவாக்கவில்லை, ஆதாம்தான் பாவம் செய்தான். நம்முடைய உடல் விபச்சாரபாவத்திற்காக கர்த்தர் படைக்க வில்லை.

உயிர்த்தெழுதலின் போது நம்முடைய உடல் உயிர்த்தெழுப்பப்படும். எனவே உணவிற்காக  உடலோடு நாம் என்ன செய்கிறோமோ அதுவல்ல மாறாக பாலியல் சம்பந்தமாக நம் உடலோடு நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நம்மை பாதிக்கும்.

வீரர். கீதா, தில்லி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *