பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது
லூக் 16:1
கர்த்தர் உலகில் ஒரு சக்திவாய்ந்த உருவம் மட்டுமல்ல, அவர் ஒரு அறிவார்ந்த வடிவமைப்பாளரும் கூட, உலகில் இருக்கும் அனைத்து பொருட்களும் ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பது, உயிருள்ள மற்றும் உயிரற்றப் பொருட்கள், ஒரு சிறிய கூழங்கல் கூட அவருடைய சிருஷ்டிப்பின் வேலைதான். ஆதி அதிகாரம் 1 ஆம் அதிகாரத்தில் உலகின் மீது அதிகாரத்தை பய்னபடுத்தவும், அதை கீழ்படுத்தும்படியாகவும் சொல்லுகிறார். (ஆதி 1:26-28,).
வளங்களை அனுபவிப்பதற்கான கிருபை நமக்கு வழங்கப்பட்டுள்ளது ஆனால் அதன் உரிமையானது அவரிடமே உள்ளது. லேவி 25:23-24 இல் நிலங்களை நிரந்தரமாக விற்பதை கர்த்தர் தடை செய்கிறார் ஏனெனில் அது அவருக்கு சொந்தமானது, நாம் சுற்றுச் சூழலின் பொருப்பாளர்கள். மனிதன் கர்த்தருக்கு கீழ்ப்படியாமல் பூமியை கவனித்துக்கொள்ள தவறினால் ஏற்படும் பயங்கரமான விளைவுகளைப் பற்றி ஏசாயாவும் எரேமியா தீர்க்க தரிசனம் சொல்லுகிறார்கள். (ஏசே 24:4-6, எரே 2:7). லூக்கா 16:1 இல் நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், மேலதிகாரி தனது உடைமைகளை வீணடித்ததற்காக செல்வந்தர் அதிருப்தி அடைகிறார். இந்த பூமியின் பொக்கீஷங்களை நாம் புத்திசாலித்தனமாக செலவு செய்திருக்கிறோமா என்று இந்த வசனத்தை மனதில் வைத்துக்கொண்டு நாம் நம்மை ஆராய்ந்து பார்ப்போம், .
இயற்க்கையின் பொக்கீஷங்களின் வகைகள் – சூரியன், காடு, மலை, கனிமங்கள், விலங்குகள், காற்று, எண்ணெய், தண்ணீர் மற்றும் நிலம்.
மேலே கொடுக்கப்பட்ட – சூரியன், காடு, மலை இவைகள் இயற்கை வளங்களை காட்டுகிறது, அதே நேரத்தில் கனிமங்கள், விலங்குகள் மற்று காற்று, எண்ணெய், நீர் மற்றும் மண் – கழிவுகளை பிரித்தெடுக்கும் சுழற்ச்சியை காட்டுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று இவ்வாறு கூறுகிறது – தாதுக்கள், மரக்கட்டை, உலோகங்கள், புதைபடிவங்கள் மற்றும் எரிபொருள் போன்ற 62 மில்லியன் டன் வளங்கள் பூமியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன என்றும் உலகின் இயற்கை வளங்களில் 1/5, ஒவ்வொரு மனிதருக்கும் சராசரியாக 10 டன்கள் வீணாகின்றன. புள்ளி விவரங்கள் நம்மை திகைக்க வைக்கின்றன. வளங்களை பயன்படுத்துதல் மற்றும் கழிவு உருவாக்கம் சுற்று சூழலை பாதிக்கின்றன. எனவே தொழில்துறை, தொழில்நுட்பம் மற்றும் நுகர்வோர் சரியான தேர்வு செய்ய வேண்டும்.
யோவான் 6:1-15 (ஐந்தாயிரம் பேருக்கு உணவளிப்பது) இதன் மூலம் இயேசு எவ்வாறு மனிதர்களுடைய தேவைகளை அறிந்திருந்தார் என்றும், வளங்களை சரியாகவும் நியாயமாகவும் பகிர்ந்து கொடுத்தார் என்பது தெளிவாகிறது. இந்த கோட்பாடுகள் உலகில் இருக்கும் வளங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை நமக்கு கற்றுக்கொடுக்கிறது. வளங்களை சரியாக பயன்படுத்துவதன் மூலம் அவை நிலைத்திருக்கும். மனிதனின் அதிகப்படியான சுரண்டல், அதிக செலவு செய்தல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மற்றும் வளங்களை வீணாக்கும் பண்பாடு, இவை அனைத்தும் இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்த விடவில்லை. வேதம் முழுவதும், மனித வரலாற்றில் கர்த்தரின் தலையீட்டைப் பார்க்கிறோம், கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் வளங்களை நாம் பராமரிக்க வேண்டும் அதை தவறாக பயன்படுத்தும்போது கர்த்தருடைய தீர்ப்பை கொண்டுவருகிறது. பில்லி கிரஹாம் ஒரு தடவை இப்படியாகச் சொன்னார், “அனைத்து மக்களுக்கும் மேலாக, கிறிஸ்தவர்கள்தான் சுற்றுப்புறசூழலை குறித்து கவலைப்பட வேண்டும்.” அவர் வேததிலிருந்து விளக்கினார், கர்த்தர் உலகை படைத்து அதை காத்துக்கொள்ளுமாறு மனிதர்கள் கையில் ஒப்படைத்துள்ளார். பேராசையை அல்ல நம்முடைய தேவைகளை நிறைவேற்ற கர்த்தர் நமக்கு கொடுத்த இந்த வளங்ககளை நாம் எப்படி கையாளுகிறோம் என்று அவருக்கு கணக்கு கொடுக்க வேண்டும். இதை மனதில் வைத்துக்கொண்டு மக்களுக்கு நாம் அறிவுறுத்த வேண்டியது என்னவென்றால், இயற்கை வளங்களை வீணாக்க கூடாது என்பது தான்.
கர்த்தருடைய சிங்காசனத்திற்கு முன்பாக நாம் தலை வணங்கி நாம் இந்த பூமியை எவ்வாறு கையாண்டிருக்கிறோமோ அதற்காக மன்னிப்பு கேட்போம், மேலும் நம்மை ஆசீர்வதிக்குமாறு அவரிடம் ஜெபிப்போம்.
Sol. Nirmala Lazar
