மனுஷர்ஒடுக்கப்படும்போதுதிடப்படக்கடவர்கள் என்று நீர்சொல்ல, தாழ்ந்தோர்ரட்சிக்கப்படுவார்கள். –
யோபு 22:29
இப்பிரபஞ்சத்தின் அதிபதியாகிய சாத்தான் நம்மை வீழ்த்த விரும்பிகிறான். ஆனால் கர்த்தரை ஆராதித்து, அவருக்கு நம்மை ஒப்புகொடுத்து அடிபணியும்போது நம்மை உயர்த்தி நமக்கு உதவும் ஒரே உண்மையான தேவன் அவர் மட்டுமே.
நான் உங்கள் அனைவரோடும் என்னுடைய சாட்சியை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். கடந்த ஆண்டு பெருந்தொற்றின் காரணத்தால் எங்களுடைய பள்ளியில் முழு ஊதியம் எனக்கு கொடுக்கப்பட வில்லை. அக்டோபர் 25, 2021 இல் பள்ளி மீண்டும் திறந்தது. பல நாட்கள் பள்ளிக்கு வராததன் காரணமாக மாணவர்கள் அனைத்யையும் மறந்து விட்டனர். நன்றாக திட்டமிட்டு மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க வேலை செய்தேன். ஆசிரியர்களுக்கும் இதற்காக பயிற்சி கொடுத்தேன்.
சம்பள நாள் வந்தது. அனைத்து ஆசிரியர்களுக்கும் முழு சம்பளம் கொடுக்கப்பட்டது. ஆனால் எனக்கு முழு சம்பளம் கொடுக்கப்பட வில்லை. என் இதயம் பாரமாக இருந்தது, நான் மிகவும் மன்முடைந்து போனேன். சம்பளத்திற்காக மட்டும் அல்ல, என்னுடைய கடின உழைப்பையும் அவர்கள் அங்கீகரிக்க வில்லை. நான் மிகவும் கலக்கம் அடைந்தேன். ஆனாலும் கூட ஜெபித்தேன் கர்த்தருக்கு நன்றி சொன்னேன். இது டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி நடந்தது.
என்னுடைய மகளின் உயர்கலிவிக்காக எனது குடும்பம் பெங்களூருக்கு இடம் பெயர் திட்டமிட்டனர். டிசம்பர் 18 ஆம் தேதி என்னுடைய தோழி என்னை அழைத்தாள், நேர்முக தேர்வு ஒன்று உள்ளது நீ அதில் கட்டாய்ம் பங்குகொள்ள வேண்டும்,, என்றாள். இது உம்முடைய சித்தமானால் தேவனே என்னை அங்கே அனுப்பும் என்று ஜெபித்தேன். கர்த்தர் ஏசாயா 64:4 மூலமாக என்னோடு பேசினார், நீ களிமன்; நான் உங்களை உருவாக்குகிறவர்” நாம் இந்த தேர்வில் பங்குகொண்டேன். தேர்வு 6 சுற்றில் நடந்தது. எல்லா சுற்றையும் கடந்து சென்று வெற்றி அடைய எனக்கு புத்திசாலித்தனம் கொடுத்தது கர்த்தர்தான். ஏற்கனவே நேரடி வகுப்பு துவங்கி விட்டதால், நல்ல சம்பளத்தோடு பெங்களூரில் ஒரு மதிப்புமிக்க கலிவி நிறுவனத்தில் சீனியர் அகாடமிக் ஒருங்கிணைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். உடனடியாக வேலையில் சேருமாரு என்னை அழைத்தனர். நானும் ஜனவரி 3 ஆம் தேதி வேலையில் சேர்ந்தேன்.
HR என்னை வரவேற்றார் மேலும் சிறிது நேரம் காத்திருக்குமாறு சொன்னார். இதற்கிடையில் தலைமை ஆசிரியை என்னை சந்தித்து நான் சேருவதற்கான அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுமாறு கேட்டார். அதற்கு பின் மீண்டும் அவரை சந்தித்த வேளையில், கர்த்தருக்கு நன்றி சொல்லுமாறு அவர் என்னிடம் சொன்னார். அதற்கான காரணத்தையும் அவர் கூறினார். அதிகாலை 3 மணி அளவில் ஒரு மின்னஞ்சல் வந்ததாகவும்,அதில், 3ஆம் தேதி அன்று வருபவர்களுக்கு பணி நியமனம் செய்யுமாறும் மற்றவர்களுக்கு 4 மாதம் கழித்து வரும்படியும் சொல்லவும் என்று எழுதியிருந்ததாம்.
நான் தாழ்வில் இருந்தபோது கர்த்தர்தாமே தன்னுடைய நீதியின் கரத்தினால் என்னை தூக்கினார். எல்லா மகிமையும் அவருக்கே. ஆமேன்.
ஏசா 12:2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்;கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
Sol. Preethi Bosco
