; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார்.
(லூக் 1:51).
ஒருவர் பரிமாறும்போது எப்போதும் காலியான கோப்பையே, நிரப்புவதற்காக நிரப்புபவரின் கவனத்தை ஈர்க்கும். ஏற்கனவே வேறு ஏதாவது பல்வேறு நிலைகளில் நிரப்பட்ட கோப்பைகள் புறக்கணிக்கப்படுகின்றன. அனைத்து கோப்பைகளுக்கு மத்தியில் காலியான கோப்பைக்கே மரியாதை கிடைக்கிறது.
கர்த்தரை பொறுத்தவரை, ஒருவர் ஆணா, பெண்ணா, கன்னிப்பெண்ணா, திருமணமானவரா, பரிசேயரா, அல்லது பொதுநலவாதியா, உயர்ந்தவரா அல்லது அந்தஸ்தில் குறைந்தவரா என்பது முக்கியம் அல்ல. ஆனால் ஒருவன் நிரம்பி இருக்கிரானா அல்லது காலியாக இருக்கிறார்னா அதாவது தலைகனம் பிடித்தவனாக அல்ல மாறாக சேவகனைப் போல தாழ்ச்சியுள்ள் இதயம் உடையவனா என்பதை கர்த்தர் பார்க்கிறார்.
எல்லாத்தலைமுறையிலும் மரியாள் ‘பாக்கியவதி’ என்று அழைக்கப்படும் பெருமையை பெற்றாள். அவளுடைய” அடிமையின் தாழ்நிலையை” கண்டு கர்த்தர் பரிசளித்தார். கன்னியாக இருப்பது அல்லது இளமையாக இருப்பது, அல்லது பெண்ணாக இருப்பது அல்லது ஒரு ஆணுக்கு மணம் முடிக்க நிச்சயிக்கப்பட்டிருந்தது என் எதுவுமே தடையாக இல்லை. அவளுடைய கோப்பை நிறப்பப்பட்டது.
பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்து “அடிமையின் ரூபம்” எடுத்ததை கனம் பண்ணினார். (பிலி 2:7-11). ஒவ்வொரு தேவபிள்ளைக்கும் கர்த்தர் இப்படியே கனம் பண்ணுவார்.
‘அடிமைபோல தாழ்ச்சியான நிலையை’ பெறுவதற்கான முறைதான் என்ன? இதை நாம் பவுலிடம் தெரிந்துகொள்கிறோம்.
பவுல் தன்னுடைய மாமிசத்தில் இருந்த நம்பிக்கை மற்றும் சுயநீதி என எல்லாவற்றையும் இழந்து இரட்சகர் இயேசுவை பற்றிக்கொண்டார். (பிலி 3:8).
(பெயர் மற்றும் பாதுகாப்பு இவை அனைத்தும் பெருமைமிக்க பாபேல் கோபுரத்துக்கு சமானம், இவைகளைத்தான் பவுல் நிராகரித்தார்.)
நாம் எவ்வாறு இருக்கிறோம்?
ஒரு முறை நான் அணி சபையில் பங்கேற்று கொண்டிருந்தேன். முன்பு குடிகாரராக இருந்து குணம் அடைந்த சகோதரர் ஒருவர் செய்தி கொடுத்துக்கொண்டிருந்தார். அவர் அழுதுகொண்டே செய்தியை இவ்வாறு கொடுத்தார், “கர்த்தாவே இந்த பைபிளை தொட கூட நான் அறுகதை அற்றவன், நான் ஒரு பாவி. நான் சபைக்கு செல்லாமல் இருந்தேன். ஆனாலும் நீர் என்னை ஒரு மனிதனாக கருதி இந்த வேதத்தை கையால் தொடவும் உம்மைப் பற்றி போதிக்கவும் கிருபை தந்தீர், கர்த்தருக்கு முன்பாக அந்த சகோதரர் தன்னை தாழ்த்தியதை கண்டு நான் பயந்துபோனேன். நான் அவரை நெருங்ககூட முடியாது. அந்த நாளில் இருந்து இருதயத்தை காலி செய்ய நான் கற்றுக்கொண்டேன்.
நம்முடைய மாமிசத்தில் நம்பிக்கை வைப்பதற்கு நாம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். சுய நீதியில் நாம் பெருமை கொள்ளும் நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கலாம்; நமக்கு பாதுகாப்பையும் சார்ந்திருக்க நல்ல பெயரையும் வழங்கும் ஒரு ஆன்மீக சபையுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அவைகளையெல்லாம் நாம் எப்படி பார்க்கிறோம்? இலாபமாகவா அல்லது நஷ்டமாகவா?
அவைகளை நாம் நஷ்டமாக கருதினால், நமக்கு அது ஆதாயம்.
அவைகளை இலாபமாக கருதினால் நாம் கர்வத்தோடு இருக்கிறோம்.
கர்த்தர் மேட்டிமை உடையவர்களை சிதறடிக்கிறார்.
ஜெபம்: கர்த்தாவே என் இருதயத்தை காலி செய்ய எனக்கு உதவும். என்னுடைய மாமிசத்தினாலோ அல்லது சுற்றியுள்ள உலகத்தினாலோ எந்த லாபத்தையும் நான் ஏற்கவிடாதேயும். ‘தாழ்ச்சியுள்ள அடிமையின் நிலையை நான் பெற்று என் கோப்பை நிறம்பி வழிய எனக்கு உதவும். ஆமேன்.
Sol. Dr. Sujatha Aacha
